தமிழக எம்பிக்களுக்கு ப.சிதம்பரம் விருந்து
டெல்லி:
தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள், அரசு வழங்கும் உதவிகள் குறித்து திமுக கூட்டணிக்கட்சிகள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நேற்றிரவு டெல்லியில் உள்ளஆந்திர பவனில் விருந்தளித்தார் ப.சிதம்பரம். இந்த விருந்து நிகழ்ச்சியில், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும்,அதிமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்தும் எம்.பிக்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களை அதிமுக அரசு தேர்தல்களில் பயன்படுத்தி வரும் விதம் குறித்து தமிழகஎம்.பிக்களிடம் எச்சரிக்கை கலந்த விவாதத்தை வைத்தார் ப.சிதம்பரம்.
அவர் பேசுகையில், தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்தக்குழுக்களை அதிமுக அரசு தனக்கு சாதகமாக மிகச் சிறப்பாக பயன்படுத்தி வருகிறது.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திவைத்துள்ளது அதிமுக அரசு. இதனால் தேர்தல்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த முக்கால்வாசிஉறுப்பினர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய இடைத் தேர்தல்களில் கூட மகளிர் சுய உதவிக் குழுக்கள் அதிமுகவுக்கு மிகவும் உதவியாக இருந்தன.ஆனால் உண்மையில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மத்திய அரசின் நிதியுதவியுடன்தான் இயங்கி வருகின்றன.இது பலருக்குத் தெரியவில்லை.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம்தான் இக்குழுக்களுக்கு கடனுதவியும், சுழற்சி நிதி உள்ளிட்ட நிதியும்கிடைக்கின்றன. முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியுதவியுடன்தான் இந்தக் குழுக்கள் இயங்குகின்றன.இத்திட்டத்தை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது, அவ்வளவுதான்.
ஆனால் மகளிர் சுய உதவிக் குழுக்களை மாநில அரசே நடத்தி வருவதைப் போன்ற ஒரு தோற்றத்தை அதிமுகஅரசு தமிழகத்தில் ஏற்படுத்தி வைத்துள்ளது. இதை எம்.பிக்கள் மக்களிடம் சென்று விளக்க வேண்டும்.
மேலும் அதை விட முக்கியமாக, மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்படும் விதம், அந்த குழுக்களுக்கு தமிழகஅரசு வழங்கும் உதவிகள், மத்திய அரசு வழங்கும் உதவிகள் சரியானபடி மக்களிடம் சென்றடைகிறதாஎன்பதையும் திமுக கூட்டணியில் உள்ள எம்.பிக்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
அப்போதுதான் அதிமுக அரசின் துஷ்பிரயோக முயற்சிகளைத் தடுக்க முடியும் என்றார் ப.சிதம்பரம்.
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர், தனது மாநில எம்.பிக்களுக்கு விருந்து கொடுத்துள்ளது இதுவேமுதல் முறை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications