பழைய தொகுதிகள் அடிப்படையில் சட்டசபை தேர்தல்: ஆணையம்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி :
வரும் சட்டசபைத் தேர்தலுக்குள் சட்டசபைத் தொகுதி மறு வரையறை முடியாவிட்டால், பழைய தொகுதிகளின்அடிப்படையிலேயே தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையர் கோபாலசாமி கூறியுள்ளார்.திருநெல்வேலி வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தொகுதி மறு வரையறைப் பணிகள்வேகமாக நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் வரும் சட்டசபைத் தேர்தலுக்குள் முடிவடையாவிட்டால்,தற்போதுள்ள தொகுதிகளின் அடிப்படையிலேயே தேர்தல் நடத்தப்படும்.
புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணிகளில் மிகவும் கவனமாக செயல்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சிறு தவறு கூட இல்லாத அளவுக்கு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடந்துவருகிறது என்றார் கோபாலசாமி.












Click it and Unblock the Notifications