கவுண்டமணியை வாழவைத்த காமெடி வீரப்பன் மரணம்
சென்னை:
நகைச்சுவை மன்னன் கவுண்டமணிக்காக பல புகழ் பெற்ற வசனங்களை எழுதிய நடிகர் காமெடி புகழ் வீரப்பன்மரணமடைந்தார்.
காமெடி வீரப்பன் என திரையுலகினரால் அழைக்கப்பட்டவர் ஏ.கே.வீரப்பன். பழம்பெரும் நடிகரான இவர், பணத்தோட்டம்,படகோட்டி, சோப்பு சீப்பு கண்ணாடி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.பட வாய்ப்புகள் குறைந்த பின்னர் பிற்கால நகைச்சுவை நடிகர்களுக்கு நகைச்சுவைக் காட்சிகளை அமைத்துக் கொடுத்தார்.குறிப்பாக கவுண்டமணி புகழ் பெறக் காரணமாக இருந்த பல நகைச்சுவை வசனங்களையும், காட்சிகளையும் அமைத்தவர்வீரப்பன்தான்.
பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், உதய கீதம், சின்னத்தம்பி, கரகாட்டக்காரன் என கவுண்டமணியின்பெரும்பாலான படங்களுக்கு வீரப்பன் காமெடி காட்சிகளை அமைத்தார்.
இந்த நகைச்சுவைக் காட்சிகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்றும் ரசித்துப் பார்க்கப்படுகின்றன.
ஆரம்பத்தில் சிவாஜி கணேசனுடன் சக்தி நாடக சபாவில் நடித்துக் கொண்டிருந்தார் வீரப்பன். தமிழக அரசின் கலைமாமணிவிருதும் பெற்றுள்ளார்.
நடிப்பு, வசனம் எழுதியது தவிர தெய்வீக ராகங்கள் என்ற படத்தையும் இயக்கியவர் வீரப்பன். 72 வயதான வீரப்பன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். அவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒருமகன் உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications