திருச்சி: சாலை விபத்தில் 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள வந்த ரியல் எஸ்டேட் அதிபர் குடும்பத்தைச்சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் சாலை விபத்தில் மரணமடைந்தனர்.கோவையைச் சேர்ந்தவர் அருள்ராஜ். ரியல் எஸ்டேட் அதிபரான இவர் மனைவி கிரேஸி, குழந்தை ஜோஷிபா உள்ளிட்ட 9பேருடன் இரண்டு குவாலிஸ் கார்களில் வேளாங்கண்ணிக்குக் கிளம்பினார்.
திருச்சி-தஞ்சாவூர் சாலையில் இவர்களது கார்கள் வந்து கொண்டிருந்தன. இன்று காலை ஆறரை மணியளவில் கார்கள்திருவெரும்பூர் பகுதியில் வந்தபோது, சாலையோரம் ஒரு லாரி பழுதடைந்து நின்று கொண்டிருந்தது. முதலில் வந்த குவாலிஸ் கார்லாரியைத் தாண்டிச் சென்றது. பின்னால் வந்த கார், எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறம் பலமாக மோதியது.
இதில் கார் அப்பளம் போல நொறுங்கிப் போனது. இந்த விபத்தில் காரில் பயணித்த அருள்ராஜ், கிரேஸி, குழந்தை ஜோஷிபா,பாக்கியம், சாவித்திரி தேவி ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.4 பேர் படுகாயம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications