விநாயகர் சிலை கரைப்பு: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்கள் குறித்த விவரத்தை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரியார் திராவிடர் கழகம் அமைப்பின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத்தாக்கல் செய்திருந்தார். அதில், விநாயகர் சிலைகளைக் கரைப்பது தொடர்பாக கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் சிலஉத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. ரசாயானப் பொருள் கலக்காத விநாயகர் சிலைகளை மட்டுமே நீர் நிலைகளில் கரைக்கவேண்டும் என்பது அதில் முக்கியமானது.

இந்த உத்தரவு சென்னைக்கு மட்டுமே பொருந்துவதாக அமைந்திருந்தது. இதன் அடிப்படையில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டுவாரிய்ம் சில கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. ஆனால் தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவையில் பிளாஸ்டர்ஆப் பாரீஸ் என்ற ரசாயானப் பொருளார் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை வருகிறஞாயிற்றுக்கிழமை கோவையில் உள்ள பல்வேறு நீர் நிலைகளில் கரைக்கவுள்ளனர்.

இப்படிச் செய்தால் நீர் நிலைகள் மாசுபடும். எனவே பிளாஸ்டர் ஆப் பாரீஸ் பொருளால் தயாரிக்கப்பட்ட சிலைகளைத் தடைசெய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கற்பகவிநாயகம், தணிகாச்சலம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள்,சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில், விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடத்தை அரசு அடையாளம் கண்டு, அந்தஇடங்கள் தொடர்பான விரிவான விளக்கத்தை வருகிற 8ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை 8ம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+