உணவு, நிலம், வேலை கேட்டு மார்க். கம்யூ. செப். 13ல் மறியல்
சென்னை:
ஏழை, எளிய மக்களின் அடிப்படைத் தேவையான நிலம், உணவு, வேலை ஆகியவற்றை அரசுகள் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் செப்டம்பர் 13ம் தேதி தமிழகம் முழுவதும் 500 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் செயலாளர் வரதராஜன் தலைமையில் நடந்தது. இதில்பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதுகுறித்து வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு மீண்டும் உயர்த்தியிருப்பதுகண்டனத்துக்குரியது. இது நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும்
பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.
இதேபோல, தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி குடியிருந்து வருபவர்களை, நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டிஆக்கிரமிப்பு அகற்றல் என்ற பெயரில் வெளியேற்றுவதை மாநில அரசு கைவிட வேண்டும்.
வாய்க்கால்கள், ஏரிகள், குளங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளோரை அகற்றுவதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால்,வீட்டு வரி, தண்ணீர் வரி, மின்சார கட்டணம் செலுத்தி குடியிருந்து வருவோரின் வீடுகளை அரசு இடிப்பதை ஏற்க முடியாது.
ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அடிப்படைத் தேவைகளான நிலம், உணவு, வேலை ஆகிய மூன்றையும் நிறைவேற்றக் கோரி தமிழகம்முழுவதும் மத்திய , மாநில அரசு அலுவலகங்கள் முன்பு செப்டம்பர் 13ம் தேதி 500 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றுகூறியுள்ளார் வரதராஜன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications