கால் சென்டர்கள், பி.பி.ஓ.நிறுவனங்களுக்கு சலுகைகள்: ஜெ.
சென்னை:
கால் சென்டர்கள், பி.பி.ஓ. அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு முதல்வர் ஜெயலலிதா பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார்.
இந்தியத் தொழிலக சம்மேளனம் மற்றும் தமிழக அரசின் சார்பில் சென்னையில் கனெக்ட்-05 என்ற 2 நாள் தகவல் தொழில்நுட்பம் மற்றும்அது சார்ந்த துறைக்கான மாநாடு தொடங்கியது. முதல்வர் ஜெயலலிதா இதை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், அதிமுக அரசின் தகவல் தொழில்நுட்பம் சார் துறைக்கான கொள்கை இன்று என்னால்வெளியிடப்படுகிறது. இத்துறை தற்போது மிகப் பெரும் எழுச்சியுடன் வேக நடை போட்டு வருகிறது. எனவே தகவல் தொழில்நுட்பம்மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்த துறைகளை மேம்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
இதை உணர்ந்தே இத்துறைகளுக்கான கொள்கையை தமிழக அரசு வெளியிடுகிறது. இதன்படி, இத்துறையில் ரூ. 50 கோடி முதல் ரூ. 100கோடி வரையிலான முதலீட்டுடன் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு ரூ. 25 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
சிறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 40 சதவீதம் பேர் பெண்களாக இருந்தால், அந்த நிறுவனங்கள்கூடுதல் முதலீட்டு மானியம் பெறத் தகுதி படைத்தவர்களாக கருதப்படுவர். அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரை மானியம் கிடைக்கும்.
கணித மேதை ஸ்ரீனிவாசன் ராமானுஜம் பிறந்த நாளான டிசம்பர் 22ம் தேதியை தமிழக அரசு இனிமேல் ஆண்டுதோறும் தகவல்தொழில்நுட்ப தினமாக கொண்டாடும் என்று கூறினார் ஜெயலலிதா.
இந்த புதிய கொள்கை 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications