கவர்ச்சி ஆடை சர்ச்சை: பதிலளிக்க சானியா மறுப்பு
ஹைதராபாத்:
கவர்ச்சி ஆடைகளை அணிந்து போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக இஸ்லாமிய மத குரு தெரிவித்துள்ள கண்டனம் குறித்துகருத்து தெரிவிக்க டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்ஸா மறுத்து விட்டார்.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். குறுகிய காலத்தில் மிகப் பெரும் புகழைப் பெற்றவர்.அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 4வது சுற்று வரை தகுதி பெற்று சாதனை படைத்தவர்.டென்னிஸில் மட்டுமல்லாமல் தான் அணியும் உடை, மூக்குத்தி, கண்ணாடி என மற்ற விஷயங்களிலும் இந்தியர்களை வெகுவாகவசீகரிக்கிறார் சானியா. அவரது மூக்குத்தியும், கண்ணாடியும் இன்றைய இளம்பெண்களின் பேஷனாக மாறியுள்ளது.
இந்த நேரத்தில், சானியா அணியும் உடைகள் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஒரு இஸ்லாமிய மதகுரு சமீபத்தில்தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். அபபோது, பெண்கள் குட்டைப் பாவாடை, கையில்லாத ஜாக்கெட்உள்ளிட்டவற்றை அணிய இஸ்லாம் மதம் அனுமதிக்கவில்லை. எனவே சானியா தனது உடைகள் விஷயத்தில் இவற்றைப்பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சானியா இப்பிரச்சினை குறித்து கருத்துவெளியிட்டுள்ளார். ஹைதராபாத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுகுறித்து நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.இந்த விவகாரத்தில் நான் தலையை நுழைக்க விரும்பவில்லை.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி எனக்கு மிகப் பெரிய அனுபவமாக அமைந்தது. பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.அங்கு எனக்கு எந்தப் பிரச்சினையும் வரவில்லை. குறிப்பாக இனவெறி சர்ச்சை எழவில்லை. எனது ஆட்டத்தை அவர்கள்ரசித்தார்கள்.
எனது டீ சர்ட்டில் எழுதப்பட்டிருந்த சில வாசகங்களை அங்குள்ள சிலர் படித்துப் பார்த்து ஜாலியாக கிண்டலடித்தார்கள்.
நான் முன்பு போல இப்போது சுதந்திரமாக வெளியே செல்ல முடிவதில்லை. எங்கு போனாலும் ரசிகர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள்.எனது ஆடை உள்பட அனைத்துயமே அவர்கள் கூர்மையாக கவனிக்கிறார்கள். இது எனக்கு வினோதமாக இருக்கிறது,இருப்பினும் இதை தவிர்க்க முடியாது என்றார் சானியா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications