கேரளாவில் தமிழக பேருந்து எரிப்பு: 6 பேர் கைது
கொச்சி:
தமிழக அரசுப் பேருந்து எர்ணாகுளம் அருகே தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
எர்ணாகுளத்திலிருந்து சேலத்திற்குக் கிளம்பிய தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து, கமலசேரி என்ற இடத்தில் 5 பேர் கொண்டஆயுதம் தாங்கிய கும்பலால் கடத்தப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிக்கி கைதாகியுள்ள கேரளாவைச் சேர்ந்த மக்கள்ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியின் ஆதரவாளர்கள்தான் இச்செயலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்றுசந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பேருந்து எரிப்புச் சம்பவம் தொடர்பாக கேரள போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.இதுவரை 6 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். அவர்கள் யார், எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதுதெரியவில்லை. கொச்சி காவல்துறை ஆணையரின் நேரடி மேற்பார்வையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பேருந்து எரிப்புக்கும், தங்களுக்கும் சம்பந்தமில்லை என மக்கள் ஜனநாயகக் கட்சி கருத்த தெரிவித்துள்ளது.
கேரளாவில் தமிழக அரசுப் பேருந்து தீவைத்து எரிப்பு!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications