கேரளாவில் தமிழக அரசுப் பேருந்து தீவைத்து எரிப்பு!

Subscribe to Oneindia Tamil

எர்ணாகுளம்:

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள, கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர்அப்துல் நாசர் மதானியின் ஆதரவாளர்கள், தமிழகத்திலிருந்து வந்த அரசுப் பேருந்தை தீவைத்து கொளுத்தினர்.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் உள்ளனர். இவர்களில் மதானியும்ஒருவர். பலமுறை நீதிமன்றங்களில் ஜாமீன் கேட்டும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. உச்சநீதிமன்றமும் மதானியின் ஜாமீனை மறுத்துவிட்டது.

இதனால் மதானியின் கட்சிக்காரர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என மத்திய உளவுத்துறை தமிழக மற்றும் கேரள மாநில அரசுகளைஎச்சரித்திருந்தது. இதைத் தொடர்ந்து கோவையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழக போலீஸார் தீவிர கண்காணிப்பில்ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் மிக பலத்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதானி அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு அதிகபட்ச பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை மதானி ஆதரவாளர்கள்கடத்தி தீவைத்து எரித்துள்ளனர்.

எர்ணாகுளத்திலிருந்து சேலத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் தமிழக அரசுப் பேருந்து கிளம்பியது. கிருஷ்ணசாமி என்றஓட்டுநர் பேருந்தை ஓட்டினார். மொத்தம் 36 பேர் பேருந்தில் இருந்தனர்.

பேருந்து கிளம்பிய சில நிமிடங்களில் அதில் அமர்ந்திருந்த 5 பேர் திடீரென எழுந்தனர். கைகளில் துப்பாக்கிகளை அவர்கள்வைத்திருந்தனர். 2 பேர் கைகளில் பெரிய கத்திகளும் இருந்தன. ஓட்டுநரை பின்பக்கமாக சென்று அவரது கழுத்தில் ஒருவன் துப்பாக்கியைவைத்தான். இதைக் கண்ட பயணிகள் பீதியில் அலற ஆரம்பித்தனர்.

பின்னர் பேருந்தை ஒதுக்குப்புறமான இடத்திற்கு செலுத்துமாறு அந்தக் கும்பல் உத்தரவிட்டது. கிருஷ்ணசாமியும் பேருந்தை ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்கு சென்று நிறுத்தினார். கமலசேரி என்ற இடத்திற்கு பேருந்து கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.பயணிகளிடமிருந்த செல்போன்களையும் அந்த தீவிரவாத கும்பல் பறித்துக் கொண்டது.

பின்னர் பயணிகளை கீழே இறங்குமாறு அந்தக் கும்பல் உத்தரவிட்டது. பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு, அக்கும்பல், பேருந்துக்குபெட்ரோல் ஊற்றி தீவைத்தது. இதில் பேருந்து முழுவதும் எரிந்து சாம்பலானது.

பேருந்துக்கு தீவைத்தபோது அக்கும்பல் மதானிக்கு ஆதரவாக கோஷமிட்டுள்ளது. பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல்சென்றது. போலீஸார் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். மதானியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால்கோவை சிறைக்குக் குண்டு வைப்போம் என அக்கும்பல் மிரட்டலாக கூறியதாக போலீஸாரிடம் பயணிகளும், ஓட்டுநர், நடத்துனரும்தெரிவித்தனர்.

துப்பாக்கி முனையில் பேருந்தைக் கடத்திச் சென்று தீவைத்து எரித்துள்ள சம்பவம் தமிழகத்திலும், கேரளாவிலும் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+