வாழ்த்த வாருங்கள் மதுரைக்கு! விஜயகாந்த் அழைப்பு
சென்னை:
புதிய அரசியல் பாதையில் நடைபோடவிருக்கும் என்னையும், எனது கட்சியையும் வாழ்த்த மதுரைக்கு வாருங்கள் என்று நடிகர்விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
நடிகர் விஜயகாந்த்தின் புதிய அரசியல் கட்சி வருகிற 14ம் தேதி மதுரையில் பிறக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் விஜயகாந்த்ரசிகர்கள் படு தீவிரமாக இறங்கியுள்ளனர். இன்று மதுரை மாநாட்டுப் பந்தலில் ஜோதி ஏற்றப்படுகிறது. விஜயகாந்த் இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜோதியை ஏற்றி வைக்கிறார்.இந்த நிலையில் மாநாட்டு அழைப்பிதழை விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். அத்துடன் ஒரு கடிதத்தையும் அவர்இணைத்துள்ளார். கட்சிக் கொடியின் நிறத்தில் அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழின் அட்டையில் பெரியார்,அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோரது படங்கள் இடம்பெற்றுள்ளன. நடுவில் விஜயகாந்த் உள்ளார்
மாநாட்டு நிகழ்ச்சி நிரல் உள் பக்கங்களில் இடம் பெற்றுள்ளது. இத்துடன் விஜயகாந்த் எழுதிய கடிதமும் உள்ளது. அதில்விஜயகாந்த் கூறியுள்ளதாவது:
என் உயிரினும் மேலான அன்பு ரசிகப் பெருமக்களுக்கும், பெரியோர்களுக்கும், தாய்மார்களுக்கும், சகோதரர்களுக்கும்,மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும், திரைப்படத் துறையைச் சார்ந்தவர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும்,காவல்துறையினருக்கும் எனது அன்பான வணக்கம்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடைய திரையுலக வாழ்க்கைக்கு துணையாக இருந்த எனது நண்பர்களுக்கும், அரசியல்தலைவர்களுக்கும், கடந்த காலம் முதல் இன்று வரை என்னை உயினும் மேலாகவும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல்மன்றம் மன்றம் திரையுலக வளர்ச்சிக்கு பாடுபட்டு கிராமம் முதல் நகரம் வரை என்னை தங்களின் இதயத்தில் வைத்து அன்புசெலுத்தும் எனது ரசிகர் மன்ற உருப்பினர்களுக்கும், நிர்வாகிககளுக்கும், அரசியலில் எனக்க பேராதரவு அளிக்க இருக்கின்றபத்திரிக்கை அதிபர்களுக்கும், பத்திரிக்கை துறை நண்பர்களுக்கும், தொலைக்காட்சி நிறுவனத்தின் நண்பர்களுக்கும்,மரியாதைக்குரிய காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் புதிய அரசியல் பாதையில் அடியெடுத்த வைக்கும் செப்டம்பர் பதினான்காம் நாளில் என்னையும், என்னுடைய புதியஅரசியல் இயக்கத்தையும் வாழ்த்த வாருங்கள் மதுரைக்கு என அன்புடன் அழைக்கிறேன், நன்றி! ஜெய்ஹிந்த்
வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்! என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் விஜயகாந்த்.
மாநாட்டு நிகழ்ச்சிகள்:
மாநாட்டுத் திடலுக்கு அண்ணா பெயரும், நுழைவாயிலுக்கு எம்.ஜி.ஆர், அரங்கத்திற்கு காந்தி, காமராஜர் பெயரும்சூட்டப்பட்டுள்ளன.
14ம் திேத காலை 7.16 மணிக்கு மங்கள இசையுடன் மாநாடு தொடங்குகிறது. 7.25 மணிக்கு கட்சிக் கொடியை விஜயகாந்த்ஏற்றுகிறார். பின்னர் எம்.ஜி.ஆர். நுழைவாயிலை அவர் திறந்து வைக்கிறார்.
7.40 மணிக்கு காந்தி, காமராஜர் அரங்கத்தை திறந்து வைக்கிறார். 7.50 மணிக்கு தமிழ்த் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள்தொடங்குகின்றன. 8 மணிக்கு பொதுச் செயலாளர் ராமு வசந்தன் தலைமையுரை ஆற்றுகிறார்.
9 மணிக்கு கட்சிப் பெயரை விஜயகாந்த் அறிவிக்கிறார். 10 மணிக்கு மாநில அமைப்புச் செயலாளர்கள் வாழ்த்துரைஆற்றுகிறார்கள். பிற்பகல் 1 மணிக்கு இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பிற்பகல் 2.30 மணிக்கு புலவர் சங்கரலிங்கம்தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு சிறப்பு வாழ்த்துரை.5.30 மணிக்கு ராமு வசந்தன் ஏற்புரை நிகழ்த்துகிறார். 6 மணிக்கு விஜயகாந்த் பேசுகிறார்.












Click it and Unblock the Notifications