சாணக்யா படத்தைத் திரையிட தடை!
சென்னை:
நடிகர் சரத்குமார், நமீதா நடித்துள்ள சாணக்யா படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
விஸ்வாஸ் சுந்தர் தயாரிப்பில் சரத்குமார், நமீதா நடிப்பில் உருவாகியுள்ள படம் சாணக்யா. வருகிற 19ம் தேதி இப்படம் திரையிடப்படுவதாக இருந்தது. இந்த நிலையில் சுஷில் குப்தா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.அதில், விஷ்வாஸ் சுந்தர் ஏற்கனவே அது என்ற படத்தைத் தயாரிப்பதற்காக ரூ. 26 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.
இப்பணத்தை பலமுறை திருப்பிக் கேட்டும், படம் முடிந்தவுடன் திருப்பித் தருவதாக கூறியிருந்தார். ஆனால் கூறியபடி அவர் பணத்தைத் தரவில்லை. எனக்குப் பணம் கொடுக்காத நிலையில் சாணக்யா படத்தைத் தயாரித்துள்ளார்.
எனவே என்னிடம் வாங்கிய கடன் தொகையைத் திருப்பிச் செலுத்திய பிறகே சாணக்யா படத்தை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவிடம், புதன்கிழமைக்குள் பணத்தைத் திருப்பிச் செலுத்தி விடுவதாக சுந்தரின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்த, பணத்தை கூறியபடி திருப்பித் தந்து விட வேண்டும். அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications