லஞ்சம் வாங்கும் இன்ஸ்பெக்டர்: ஏட்டு பரபரப்பு புகார்!
சென்னை:
சென்னை குரோம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஆயிரக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக, அதே காவல் நிலையத்தில்பணியாற்றும் தலைமைக் காவலர் புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குரோம்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருப்பவர் பாலசுப்ரமணியம். அதே காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக இருப்பவர் ரங்கநாதன். மிகவும் நேர்மையானவர், சமீபத்தில் கூட தனது உயிரையும் துச்சமென மதித்து ஒருகுற்றவாளியைப் பிடித்து உயர் அதிகாரிகளிடம் சபாஷ் பெற்றவர்.இந்த நிலையில் தலைமைக் காவலர் ரங்கநாதன், திங்கள்கிழமை காலை பணிக்கு வந்தார். வந்தவுடன் நேராக உதவி ஆய்வாளர்தங்கத்திடம் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், ஆய்வாளர் பாலசுப்ரமணியம் பலரிடம் ஆயிரக்கணக்கில் லஞ்சம்வாங்குகிறார்.
காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு திருட்டு விசிடி விற்பனையாளரைப் பிடித்து விசாரித்தபோது, கடை உரிமையாளர்,தலைமைக் காவலர் பாலச்சந்தர் மூலம் ஆய்வாளருக்கு மாதம் ரூ. 7500 கொடுத்து வருவதாக தெரிவித்தார். அதேபோலஅனுமதியின்றி கிளப் நடத்தும் கோபி என்பவர் மாதம் ரூ. 37,000 கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
ஹோட்டலில் அனுமதியின்றி பார் நடத்தும் அதன் உரிமையாளர் ஆய்வாளருக்கு மாதம் ரூ. 18,500 தருவதாக தெரிவித்துள்ளார்.இதுதவிர, சாலையோரக் கடைகள் நடத்துவோர் ஆய்வாளருக்கு மாதம் தலா ரூ. 1000 லஞ்சமாக கொடுப்பதாகதெரிவித்துள்ளனர்.
எனவே இதுகுறித்து ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட உதவி ஆய்வாளர் தங்கம், புகாரைப் பதிவு செய்து கொண்டு அதை உயர்அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். ரங்கநாதனின் இந்தப் பகிரங்க புகார் மனு சென்னை காவல்துறை வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications