ஏலத்திற்கு வந்தது கே.ஏ.எஸ். சேகர் வீடு!
மதுரை:
லாட்டரிச் சீட்டு விற்பனையில் பெரும் புரட்சி படைத்த மதுரை கே.ஏ.எஸ்.சேகரின் வீடு ஏலத்திற்கு வந்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.ஏ.எஸ். சேகர் சாதாரண லாட்டரிச் சீட்டு ஏஜென்டாக இருந்தவர். தனது வியாபார உத்தி மற்றும்கடுமையான உழைப்பால் தமிழகத்தின் முன்னணி லாட்டரிச் சீட்டு அதிபராக உயர்ந்தார். தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் கே.ஏ.எஸ். சேகரின் லாட்டரிச் சீட்டுக் கடைகள் வியாபித்திருந்தன.மதுரை முழுவதும் அவர் ஏராளமான சொத்துக்களையும் வாங்கிக் குவித்தார். ஒரு கட்டத்தில் அவர் சொத்தே வாங்கக் கூடாதுஎன்று தடை விதிக்கும் அளவுக்கு சொத்துக் குவிப்பில் உச்சத்தை எட்டினார் சேகர்.
இந்த நிலையில் வணிக வரியைக் கட்டாமல் மோசடி செய்ததாக சேகர் மீது பரபரப்புக் குற்றச்சாட்டு எழுந்தது. 1983ம் ஆண்டுமுதல் 1993ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ரூ. 130 கோடி வரை அவர் வணிக வரியில் மோசடி செய்திருப்பதாகவும் புகார்எழுந்தது.
இந்த நிலையில் வழக்கும் தொடரப்பட்டது. விசாரணையின்போது சேகர் செலுத்த வேண்டிய வணிக வரி பாக்கி ரூ. 40 கோடிஎன்று அறிவிக்கப்பட்டது. இந்த தொகையை கட்டக் கூறி கடந்த மே மாதம் 16ம் தேதி சேகருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.செப்டம்பர் 11ம் தேதி தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் சேகர் வரியைக் கட்டாததால் அவரது மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள பிரமாண்டமான பங்களா வீட்டைஏலத்தில் விட வணிக வரி அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி திங்கள்கிழமை பிற்பகல் சேகரின் வீட்டுக்கு வணிக வரிஅதிகாரிகள் வந்தனர்.
வீடு, வணிக வளாகம், தெற்கு மாரட் வீதியில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட சொத்துக்கள் பகிரங்க ஏலத்தில் விடப்பட்டன.இருப்பினும் மாலை வரை யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதையடுத்து மீண்டும் இச் சொத்துக்களை ஏலத்தில் விட வணிகவரி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, வணிக வரி பாக்கித் தொகையை அதிகாரிகள் சரியாக நிர்ணயிக்கவில்லை என்று கே.ஏ.எஸ். சேகர் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், முதலில் ரூ. 130 கோடி கட்ட வேண்டும் என்றனர். பின்னர் இதை ரூ. 90 கோடியாகக் குறைத்தனர்.தற்போது ரூ. 40 கோடி என்று கூறியுள்ளனர். என் மீதான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த நிலையில் சரியாக கணக்குப்பார்த்து நான் கட்ட வேண்டிய சரியான பாக்கித் தொகை எவ்வளவு என்பதை அதிகாரிகள் நிர்ணயம் செய்ய வேண்டும்.
இன்றைய கணக்குப்படி பார்த்தால் ரூ. 11 லட்சம் மட்டுமே நான் பாக்கி செலுத்த வேண்டும். அதிலும் ரூ. 6 லட்சத்தை ஏற்கனவேசெலுத்தி விட்டேன். எனவே வரியாக எவ்வளவு தொகையை நிர்ணயிக்கிறார்களோ அதை கட்ட தயாராக உள்ளேன். மற்றலாட்டரிச் சீட்டு ஏஜென்டுகள் அனைவருக்கும் நீதிமன்ற உத்தரவுப்படி கணக்குப் பார்த்து முடித்து விட்டனர். என்னுடையகணக்கை மட்டும் இன்னும் முடிக்காமல் உள்ளனர் என்றார் சேகர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications