புதுக் கட்சி தொடங்கினார் விஜயகாந்த்! மாநாடு தொடங்கியது; மதுரை குலுங்கியது!
மதுரை:
நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று தனது கட்சிக்குப் பெயர் சூட்டியுள்ளார். மாநாட்டையொட்டி தமிழகம்முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விஜயகாந்த் ரசிகர்கள் மதுரையில் குழுமியுள்ளதால் நகரம் முழுவதும் ரசிகர்கள் தலையாகவேதெரிகிறது.
இன்று காலை சரியாக 7 மணிக்கு மாநாடு தொடங்கியது. நடிகர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய் பிரபாகரன்,சண்முகப் பாண்டியன் மற்றும் குடும்பத்தினருடன் மாநாட்டு திடலுக்கு வருகை தந்தார். அவரைப் பார்த்ததும் ரசிகர்களும், மன்றநிர்வாகிகளும் தலைவர் கேப்டன் வாழ்க என்று கோஷம் எழுப்பி வரவேற்றனர்.பின்னர் 50 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்திற்கு சென்ற விஜயகாந்த் அங்கு தனது மன்றக் கொடியை (அதுவே கட்சிக்கொடியும் ஆகும்) ஏற்றி வைத்தார். பின்னர் 14 வெண் புறாக்களை அவர் பறக்க விட்டார். இதையடுத்து தொண்டர் படையின் அணிவகுப்புநடந்தது. சீருடையுடன் தொண்டர்கள் கொடுத்த அணிவகுப்பு மரியாதையை விஜயகாந்த் சல்யூட் அடித்து ஏற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. விஜயகாந்த் மேடையில் ஏறியதும் அங்கே தனக்காக போடப்பட்டிருந்த அலங்காரஇருக்கையைப் பார்த்தார். அதை உடனடியாக அகற்றக் கூறிய அவர், அனைவருக்கும் உள்ளது போல சாதாரண பிளாஸ்டிக் இருக்கையைபோடுமாறு கூறி அதிலேயே உட்கார்ந்தார்.
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதன் பின்னர் மதுரை மாவட்ட விஜயகாந்த் மன்றத் தலைவர் முத்து வரவேற்பு ஆற்றினார்.மாநில பொதுச் செயலாளர் ராமு வசந்தன் தலைமை உரையாற்றினார். அவர் பேசுகையில், 1978ம் ஆண்டு விஜயகாந்த் திரையுலகில்அடியெடுத்து வைத்தார்.அப்போது மாநில துணைத் தலைவராக இருக்கும் சுந்தரராஜன் வீட்டில் வைத்து ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும்யோசனை பிறந்தது.
இதைத் தொடர்ந்து தென்னிந்திய விஜயகாந்த் ரசிகர் மன்றம் என்ற பெயரில் மன்றத்தைத் தொடங்கினோம். இதையடுத்து 1982ல் அகிலஇந்திய விஜயகாந்த் ரசிகர் மன்றமாக இது பெயர் மாற்றப்பட்டது. அந்த சமயத்தில் வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன் எனவிஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து தமிழ்நாடு விஜயகாந்த் ரசிகர் மன்றம் என மன்றத்தின் பெயரை மாற்றினோம்.
கடந்த 22 ஆண்டுகளாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கைகளின் அடிப்படையில் மன்றததினரை விஜயகாந்த் வழி நடத்திவருகிறார். அவரது கட்டுக்கோப்பான வழிகாட்டுதல், தலைமையின் காரணமாகவே இன்று அரசியல் களத்தில் மன்றம் புகுந்துள்ளது.
திரையுலகில் புரட்சியை ஏற்படுத்தியதைப் போலவே, அரசியல் அரங்கிலும் விஜயகாந்த் பல சாதனைகளை நிகழ்த்துவார். ஒரு நல்லஅரசியல் தலைவர் என்ற பெயரை அவர் வாங்குவார் என்பதில் சந்தேகமே இல்லை என்றார் ராமு வசந்தன்.
ராமு வசந்தன் பேசிய பிறகு விஜயகாந்த் எழுந்து ரசிகர்களின் பலத்த கரகோஷத்திற்கு இடையேை கட்சியின் பெயரை அறிவித்தார். நமதுகட்சிக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக விஜயகாந்த் அறிவித்தபோது ரசிகர்களின் கரகோஷம்வின்னைத் தொட்டது.
மாநாட்டையொட்டி மதுரையில் ரசிகர்கள் லட்சக்கணக்கில் குவிந்துள்ளனர். பேருந்துகளுக்கு கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டதால் வேன்,கார் போன்ற கிடைத்த வாகனத்தில் ஏறி ரசிகர்கள் மதுரைக்கு வந்துள்ளனர்.
மாநாடு நடைபெறும் திருநகர் பகுதியைச் சுற்றிலும் உள்ள பசுமலை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் ரசிகர்கள்அலைமோதியவண்ணம் மாநாட்டுக்கு சென்று கொண்டுள்ளனர்.
மாாநாட்டுத் திடலில் கட்சிக் கொடிகள், கரை வேட்டி போட்ட வேட்டிகள், துண்டுகள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றைரசிகர்கள் போட்டி போட்டு வாங்குகின்றனர். இதனால் அங்கு விற்பனை களை கட்டியுள்ளது.
நுழைவுக் கட்டணமாக ரூ. 5 வசூலிக்கப்பட்டது. காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய பின்னரே ரசிகர்கள் மாநாட்டுத் திடலுக்குள்அனுமதிக்கப்படுகின்றனர். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் 4 கவுண்டர்கள் அமைத்து டிக்கெட் வழங்கப்படுகிறது.
மாநாட்டு வளாகத்தில் அனைவரையும் கவர்ந்த இன்னொரு விஷயம், முன்னாள் முதல்வர்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தது. இதுவரைதமிழக முதல்வராக இருந்தவர்களின் படங்களை வைத்து, 2006 என்ற தலைப்பின் கீழே விஜயகாந்த் படம் வைக்கப்பட்டிருந்தது.
மாநாட்டுத் திடலுக்கு அருகே விஜயகாந்த் கட்சியின் வண்ணம் பொறித்த ராட்சத காற்றழுத்த பலூன் பறக்க விடப்பட்டுள்ளது. மிகப்பெரியதாக உள்ள அந்தப் பலூன் சுற்று வட்டாரத்தினரை வெகுவாக கவர்ந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications