நெல்லை முப்பெரும் மாநாடு: தயாராகிறது திமுக!
திருநெல்வேலி:
நடிகர் விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசம் எழுச்சியுடன் தொடங்கியிருப்பதன் பின்னணியில், நெல்லையில் நடைபெறவுள்ளதிமுகவின் முப்பெரும் மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்த அக்கட்சியினர் விறுவிறுப்பான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.
திமுகவின் முப்பெரும் மாநாடு வருகிற 17ம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் திமுகவினர் கடந்த 2மாதமாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரமாண்டமாக ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.விஜயகாந்த்தின் புதிய கட்சிக்கு மிகப் பெரும் இளைஞர் கூட்டம் திரண்டு வந்ததைக் கருத்தில் கொண்டு முப்பெரும் மாநாட்டில்அதை விட அதிகமாக இளைஞர்களைத் திரட்ட நெல்லை திமுகவினர் ஆயத்தமாகி வருகின்றனர்.
17ம் தேதி காலை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திமுக தலைவர் கருணாநிதி நெல்லை வருகிறார். அவருக்கு நெல்லைஅரசியல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிக சிறப்பான வரவேற்பு அளிக்க திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
காலை 8 மணிக்கு ஆலங்குளம் செல்லும் கருணாநிதி அங்கு படுகொலை செய்யப்பட்ட ஆலடி அருணா நிறுவியுள்ள கல்லூரியில்,அமைக்கப்பட்டுள்ள மார்பளவுச் சிலையை திறந்து வைக்கிறார். அதன் பின்னர் பாளையங்கோட்டையில் நடைபெறும் முப்பெரும்விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.
காலையில் முரசொலி விருது, கலைஞர் விருதுகளை வழங்குகிறார். மாலையில் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.கருணாநிதியை வரவேற்கும் வகையில் ரயில் நிலையம் முதல் தங்குமிடம் வரை திமுக கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.வரவேற்பு வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கருணாநிதிக்கு இணையாக மு.க.ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விளம்பரங்களில் கலக்கியுள்ளனர் திமுகவினர்.100 அலங்கார மின் விளக்கு விளம்பரங்கள், 1000 வண்ணப் பதாகைகளை வரவேற்புக்காக நகர் முழுவதும்வைக்கப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications