மாநகராட்சி அலுவலகத்தில் அதிமுக கவுன்சிலர் தீக்குளிப்பு!
சென்னை:
சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திற்கு முன்பு தீக்குளிக்க முயன்ற அதிமுக கவுன்சிலரை போலீஸார் தடுத்துக்காப்பாற்றினர்.
சென்னை மாநகராட்சியின் 39வது வார்டு உறுப்பினர் பன்னீர்செல்வம். வியாழக்கிழமை காலை பன்னீர்செல்வம் கையில்மண்ணெண்ணை டின்னுடன் மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டடத்திற்கு வந்தார்.அங்குள்ள ஆணையர் விஜயக்குமர் அலுவலகத்தை நோக்கி வேகமாக சென்ற அவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீவைக்க முயன்றார். இதைப் பார்த்த அங்கிருந்த போலீஸார் விரைந்து சென்று பன்னீர்செல்வத்தைக் காப்பாற்றி அவர்மீது தண்ணீரை ஊற்றினர்.
தீக்குளிக்க முயன்றது தொடர்பாக ஆணையர் விஜயக்குமாருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் பன்னீர்செல்வம். அதில், சென்னைமாநகராட்சி சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் பல கோடி செலவில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை 16ம் தேதிமுதல்வர் திறந்து வைக்கிறார்.
இதுதொடர்பான நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பிதழ் வரவில்லை. மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் சாதாரண நிகழ்ச்சிக்குக் கூடஉறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படுது. ஆனால் முதல்வர் கலந்து கொள்ளும் மிகப் பெரிய நிகழ்ச்சிக்கு எனக்குஅழைப்பிதழ் தரப்படவில்லை. இதில் உள்நோக்கம் உள்ளது.
மேலும், மேம்பால ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டு குற்றப்பத்திரிக்கை சாட்டப்பட்ட கவுன்சிலர் ராமமூர்த்தி என்பவரை விழாஏற்பாட்டுக் குழுவுக்குப் பொறுப்பாளராக நியமித்துள்ளனர். இது மற்ற உறுப்பினர்கைள அவமதிப்பது போலாகும்.
முதல்வர் விழாவுக்கு எனக்கு அழைப்பிதழ் அனுப்பாததைக் கண்டித்து தீக்குளிப்பதாக அதில் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மாநகராட்சி அலுவலகத்தில் அதிமுக கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications