பதவி விலகுகிறார் அத்வானி!
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து வரும் டிசம்பர் மாதம் விலகுவதாக அக்கட்சியின் தலைவர் எல்.கே.அத்வானிஅறிவித்துள்ளார்.
பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. பலபிரச்சினைகள் குறித்துப் பேசப்பட்டாலும், அத்வானி தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற நிர்பந்தமும் அதிக அளவில்இருந்தது.இந்த நிலையில் செயற்குழு முடிவில் அத்வானி பேசினார். அப்போது பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அவர்பேசுகையில், பாஜகவின் முதலாவது ஆண்டு மாநாடு மும்பையில் கடந்த 1980ம் ஆண்டு நடந்தது. இப்போது கட்சி தொடங்கி 25ஆண்டுகள் ஆகின்றன. டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் மும்பையில் நடக்கவுள்ள வெள்ளி விழா ஆண்டுக் கூட்டத்திற்கு நான் தலைமைவகிக்கப் போகிறேன்.
அதுவே நான் தலைவர் பதவியிலிருந்து தலைமை வகிக்கும் கடைசிக் கூட்டமாகும். அதன் பின்னர் நான் பதவியிலிருந்து விலகிக் கொள்ளதிட்டமிட்டுள்ளேன். வெங்கய்யா நாயுடு சொந்தக் காரணங்களுக்காக பதவி விலக நேரிட்டபோது, நான் மீண்டும் தலைவர் பதவிக்கு வரநேரிட்டது. இப்போது டிசம்பர் மாதத்துடன் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன்.
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகிய இரு அமைப்புகளும் பல்வேறு ஒத்த கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், தனித்து, தனித்துவத்துடன்செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன். முக்கியப் பிரச்சினைகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்தை, ஆலோசனையைப் பெறபாஜக என்றுமே தயங்கியது கிடையாது.
இதில் சில நேரங்களில் சில முடிவுகள் இருவருக்கும் ஏற்புடையதாக இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்அமைப்புகளின் ஒப்புதல் இல்லாமல் அரசியல் ரீதியான, அமைப்பு ரீதியான முடிவுகளை பாஜகவால் எடுக்க முடியாது என்ற தோற்றம் சமீபகாலமாக ஏற்பட்டு விட்டது.
இது ஆர்.எஸ்.எஸ், பாஜக இருவருக்குமே நல்லதல்ல. இருவரின் வளர்ச்சியையு அது பாதிக்கும். எனவே அந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது. கடந்த காலங்களைப் போல பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை வழி நடத்திச் செல்ல ஆர்.எஸ்.எஸ் முன்வர வேண்டும்.
அமைப்பு ரீதியாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆலோசனையைப் பெற எங்களுக்குத் தயக்கம் கிடையாது. ஆனால் அரசியல் ரீதியாகமக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பிலிருந்து பாஜக தவற முடியாது. பாஜகவின் செயல்பாடுகள், தேர்தல் என்ற அளவுகோலின்மூலம் அவ்வப்போது மக்களால் மதிப்பீடு செய்யப்படுகிறது என்றார் அத்வானி.
அத்வானிக்குப் பிறகு யார் தலைவராக நியமிக்கப்படப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பாஜக வட்டாரத்தில் எழுந்துள்ளது. புதிய தலைவர்குறித்து மும்பையில் நடைபெறும் வெள்ளி விழா மாநாட்டின்போது முடிவு செய்யப்படும் என மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications