ராணுவத்தை வாபஸ் பெறுமாறு இலங்கை அரசுக்கு கோரிக்கை
கொழும்பு:
தமிழர்கள் அதிகம் வசிக்கும் வட கிழக்குப் பிராந்தியத்திலிருந்து ராணுவத்தை உடனடியாக விலக்கிக் கொள்ளுமாறு, இலங்கைஅரசுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், நார்வே, ஜப்பான் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இலங்கை அமைதித் தீர்வுக்காக இலங்கை அரசுடன் இணைந்து நார்வே சமரச முயற்சியில் இறங்கியுள்ளது. இலங்கை ராணுவம்மற்றும் அரசால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகளுக்கு நிதியுதவி செய்ய பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன.அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், நார்வே மற்றும் ஜப்பான் ஆகியவை இடம் பெற்றுள்ள அந்த நாடுகளின் கூட்டம் நியூயார்க்நகரில் நடந்தது. அப்போது இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமரின் படுகொலைக்கு கண்டனம்தெரிவிக்கப்பட்டது. அமைதித் தீர்வுக்கான முயற்சிகளில் காணப்படும் சுணக்கம் குறித்து இக்கூட்டத்தில் கவலைதெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அமெரிக்கா மற்றும் நார்வே நாட்டு தூதரகங்கள் கொழும்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் இலங்கை ராணுவம் நிறுத்தி வைத்திருக்கும் ராணுவம் மற்றும் துணை ராணுவப் பிரிவுகள் தொடர்ந்துநிலைகொண்டிருப்பதால், அப்பகுதியில் அசாதாரண நிலை காணப்படுகிறது.
அதிக அளவில் வன்முறைகள் ஏற்படுவதற்கும், நிம்மதியின்மை காணப்படுவதற்கும் இதுவே காரணம் எனக் கருதுகிறோம்.எனவே இந்த படையினரை இலங்கை அரசு விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது இவர்களிடம் உள்ளஆயுதங்களையாவது குறைக்க வேண்டும்.
இலங்கையில் அரசியல் படுகொலைகள் தொடரக் கூடாது. இதை இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் கூட்டாக உறுதி செய்யவேண்டும். சிறுவர்களை படையில் சேர்ப்பதை விடுதலைப் புலிகள் நிறுத்த வேண்டும். அமைதித் தீர்வை நோக்கி நாம்அனைவரும் அடியெடுத்து வைக்க அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்.
வன்முறைகளும், படுகொலைகளும் தொடர்ந்து நடந்தால், அமைதித் தீர்வுக்காக முயற்சிக்கும் அனைவருக்குமே அதுசோர்வையும், தோல்வியையும் கொடுக்கும். அமைதி ஒப்பந்தத்தை மதித்து நடக்க வேண்டிய பொறுப்பும், கடமையும், இலங்கைஅரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications