சுனாமி நிதி காசோலைகளில் மோசடி இல்லை: தமிழக அரசு
சென்னை:
சுனாமி நிவாரண நிதிக்கு கொடுக்கப்பட்ட ரூ. 15 கோடி பணத்திற்கான காசோலைகள் திரும்பி வரவில்லை என்று தமிழக அரசுமறுத்துள்ளது.
தமிழக முதல்வரிடம் சுனாமி நிவாரணமாக கொடுக்கப்பட்ட ரூ. 15 கோடிக்கான காசோலைகள், சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்கணக்குகளில் பணம் இல்லாததால் திரும்பி வந்து விட்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது.இதில் ஒரு முக்கிய தமிழ் நடிகரின் காசோலையும் அடங்கும் எனவும் கூறப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும்ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த செய்தியை தமிழக அரசின் நிதித்துறை மறுத்துள்ளது.
இதுதொடர்பாக நிதித்துறைச் செயலாளர் ஞானதேசிகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ரூ. 15 கோடிக்கான சுனாமிநிவாரண நிதி காசோலைகள் திரும்பி வந்து விட்டதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மை இல்லை. அப்படி எந்தகாசோலையும் திரும்பி வரவில்லை.
பொதுமக்களின் பேராதரவுடன் ரூ. 155.41 கோடி அளவுக்கு சுனாமி நிதியாக பெறப்பட்டது. இதில் மிகவும் குறைந்ததொகையிலான காசோலைகள் மட்டுமே, சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் இல்லாத காரணத்தால்திருப்பப்பட்டுள்ளன. ரூ. 15 கோடி அளவுக்கான காசோலைகள் திரும்பி விட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை.
மேலும், எந்த ஒரு நடிகரின் காசோலையும் திருப்பி அனுப்பப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications