ஏன் தரக்கூடாது 33? கருணாநிதி கேள்வி
சென்னை:
மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டைத் தருவதன் மூலம் என்ன பிரச்சினை வந்து விடப் போகிறது என்று திமுக தலைவர்கருணாநிதி கோபமாக கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்கள் பொதுவாழ்வில் ஈடுபட சம உரிமை இல்லை என்பது பெரும்குறையாகும். மக்களுக்குப் பணியாற்றச் செல்ல வேண்டும் என்றால் ஆணோ, பெண்ணோ, யார் வேண்டுமானாலும்வேட்பாளராகப் போட்டியிடலாமே என்று கேட்கத்தானே தோன்றும்.அது உண்மை என்றாலும் துருப்பிடித்துக் கிடக்கும் உண்மை என்பதே பொருத்தம். பொதுத் தொகுதிகளில் யார்வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றாலும், ஆண்களே அதிக அளவில் அவற்றை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் 1996ம் ஆண்டு முதல் மாநகராட்சியிலிருந்து ஊராட்சி அமைப்புகள் வரை பெண்களுக்கு 33 சதவீதஇட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. பொதுத் தொகுதிகளில் பெண்களுக்கும் வாய்ப்பளித்து, அவர்களும் லோக் சபா, சட்டசபைகளில்33 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற வழி வேண்டும் என்பதுதான் இன்றைய பெண்களின் கருத்து.
இப்படிக் கொடுக்க அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும். சட்டம் இயற்றாமலே அரசியல் கட்சிகள் மகளிருக்கு இடங்களைஒதுக்கலாம் என கூறுவது நடைமுறைக்கு சாத்தியமானதல்ல. சக்தி வாய்ந்த தெய்வங்கள், மாரி, காளி என்கின்றனர்.செல்வதுத்துக்கு லட்சுமி, கல்விக்கு சரஸ்வதி, வலிமைக்கு பார்வதி என்கின்றனர். தாய் நாடு என்றே நாட்டை அழைக்கிறோம்.
தாய் நாட்டில் தாய்க்குலத்துக்குரிய நியாயமான உரிமைக்குத் தடைக்கல்லாக விளங்குவது ஏன்? ஆண் பாதி, பெண் பாதி என்றஅர்த்தநாரீஸ்வர தத்துவத்தைக் கூறுபவர்கள் பெண்களுக்கு 50 சதவீதத்தை அல்ல, 33 சதவீதத்தைக் கூட ஆதரிக்க முன்வரக்கூடாது? அப்படிச் செய்தால் அவர்களுக்கு என்ன பாதிப்பு வந்து விடும்? என்று கேட்டுள்ளார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications