காவலர் தேர்வுக்கு தடை இல்லை: நீதிமன்றம்
சென்னை:
தமிழகம் முழுவதும் அக்டோபர் 1ம் தேதி நடைபெறவுள்ள காவலர் எழுத்துத் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என சென்னைஉயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் காவலர் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு 2 முறை நடந்தது. இரண்டு முறையும் வினாத்தாள்கள் முன் கூட்டியேவெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் பலர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவலர் தேர்வில் நடந்தமுறைகேடுகள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.
தற்போது 3வது முறையாக அக்டோபர் 1ம் தேதி காவலர் தேர்வு மீண்டும் நடைபெறவுள்ளது. இந் நிலையில் காஞ்சிபுரத்தைச்சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில், மீண்டும் காவலர் தேர்வு நடத்தக் கூடாது. அத்தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ரவிராஜ பாண்டியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜராகி தலைமைவழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன், ஏற்கனவே காவலர் தேர்வு தொடர்பான வழக்கு டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணையில் உள்ளது.அந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதைய மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்றுவாதாடினார்.
அவரது வாதத்தை ஏற்ற நீதிபதி, மனுதாரரின் கோக்கையை ஏற்க மறுத்தார். மேலும், முந்தைய வழக்கில் தீர்ப்பு வெளியானபிறகு, மனுதாரரின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications