கருணாநிதி மீது சட்டசபையில் உரிமை மீறல் பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டமன்றத்தில் நடக்கும் துணை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் குறித்து விமர்சித்து முரசொலியில் கட்டுரைஎழுதியதற்காக கருணாநிதி மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சனையை சட்டசபையின் உரிமைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவதாக சபாநாயகர் காளிமுத்து அறிவித்தார்.

இது தொடர்பான விவாதத்தின்போது திமுக உறுப்பினர் புகழேந்தி அவைக் காவலர்களால் குண்டுக்கட்டாகவெளியேற்றப்பட்டார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்திற்குப் பிறகு அதிமுக ஆதரவாளரான பார்வர்ட் பிளாக் கட்சி உறுப்பினர் சந்தானம் ஒருஒழுங்கு பிரச்சினையைக் கிளப்பினார்.

அவர் பேசுகையில், இந்த அவை நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவைக்கு வெளியே இருந்து கொண்டு சிலர் (கருணாநிதி)இந்த அவை நடவடிக்கைகளை விமர்சனம் செய்கின்றனர். மக்களை தமிழக அரசு ஏமாற்றி வருவதாகவும், புதிய திட்டங்களைஅறிவித்துவிட்டு அதற்கு நிதி ஒதுக்காமல் இருப்பதாகவும் பேசி வருகிறார்கள்.

சட்டசபையில் முதல்வர், அமைச்சர்கள் வெளியிடும் அறிவிப்புகளை விமர்சிப்பது, சபையின் உரிமையை மீறுவதாக உள்ளதுஎன்றார்.

சந்தானத்தின் இந்தப் பேச்சுக்கு திமுக உறுப்பினர் புகழேந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரும் காங்கிரஸ் உறுப்பினர்ஞானசேகரன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். பதிலுக்கு அதிமுகவினர் கத்தியதால்அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் காளிமுத்து, சந்தானத்தை பேச விடுமாறும், புகழேந்தியை அமருமாறும் உத்தரவிட்டார்.

அப்போது முதல்வர் ஜெயலலிதா எழுந்து, இந்த அவையில் உறுப்பினராக உள்ள ஒருவர் (கருணாநிதி) வெளியில் இருந்துகொண்டு பேசுவதைத் தான் சந்தானம் குறிப்பிடுகிறார். முன்னாள் முதல்வரும் எம்எல்ஏவுமான கருணாநிதி ஏதாவது கருத்துத்தெரிவிப்பதாக இருந்தால் அவைக்கு வந்து தெரிவிக்க வேண்டும்.

வெளியில் இருந்து கொண்டு பேசக் கூடாது. அவை நடக்கும்போது எதைத் தெரிவிப்பதாக இருந்தாலும் அவையில் வந்து தான்நான் தெரிவிக்கிறேன். அதே போல அவரும் அவைக்கு வந்து பேச வாய்ப்பு ள்ளது. ஆனால், வேண்டும் என்றே அவையைபுறக்கணித்துவிட்டு அவதூறாக கட்டுரைகள் எழுதினால் அது பற்றி இங்கு குறிப்பிட்டுத் தானே ஆக வேண்டும்.

எனவே தான் சந்தானம் உரிமை மீறல் பிரச்சனையை கொண்டு வருகிறார். அதில் எந்தத் தவறும் இல்லை என்றார்.

இதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் புகழேந்தியும் பரிதியும் எழுந்து பேச முயல அவர்களுக்கு சபாநாயகர் காளிமுத்துஅனுமதி தர மறுத்தார். ஆனாலும் இருவரும் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க, அதிமுகவினர் அவர்ளுக்கு எதிராக குரல் தர,திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் பதிலுக்கு கத்தினர்.

புகழேந்தி தொடர்ந்து நின்று கொண்டே பேச, அவரை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு காளிமுத்து உத்தரவிட்டார்.இதையடுத்து அவரை காவலர்கள் குண்டுக் கட்டாக வெளியே தூக்கிச் சென்றனர். அப்போது அரசைக் கண்டித்துகோஷமிட்டபடியே அவர் சென்றார்.

இதைத் தொடர்ந்து சந்தானம் பேசுகையில்,

சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது, துணை நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் குறித்து உண்மைக்குப் புறம்பானசெய்திகளை பத்திரிக்கையில், தரம் தாழ்ந்த வகையில், மக்களை திசை திருப்பும் வகையில் கருணாநிதி எழுதியிருப்பதுஅவையின் உரிமையை மீறிய செயல்.

ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம் என எழுதப்பட்ட அந்தக் கட்டுரையில், அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு நிதிஒதுக்கவில்லை என்ற உண்மைக்குப் புறம்பான, பொய்யான தகவல்கள் உள்ளன.

இந்தக் கட்டுரையை எழுதிய கருணாநிதி இந்த அவையின் உரிமையை மீறிவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார்.

இதையடுத்துப் பேசிய சபாநாயகர், மேலெழுந்த வாரியாக இதைப் பார்க்கும்போது உரிமை மீறல் இருப்பதாகவே தெரிவதால்,இந்த பிரச்சனையை உரிமைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புகிறேன் என்றார்.

சபாநாயகரின் இந்த அறிவிப்பை எஸ்.ஆர்.பி, ஜி.கே.மணி உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்களும் திமுகவினரும் எதிர்த்தனர்.

அப்போது பேசிய காளிமுத்து, பேரவைத் தலைவர் தீர்ப்பு சொன்ன பிறகு அதை விமர்சிக்கக் கூடாது. உரிமைக் குழுவுக்குத் தானேஇந்தப் பிரச்சனை அனுப்பட்டுள்ளது. அவருக்கு (கருணாநிதிக்கு) தூக்கு தண்டனை ஏதும் விதிக்கவில்லையே. இது குறித்துப்பேசுவதாக இருந்தால் உரிமைக் குழுவில் வந்து பேசுங்கள் என்றார்.

ஆனால், சபாநாகரைக் கண்டித்து திமுக எம்எல்ஏக்களும் பிற எதிர்க் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.

சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட திமுக எம்எல்ஏ புகேழந்தி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மரபுகளை மீறுவதேஇந்த அரசுக்கு மரபாகப் போய் விட்டது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+