சென்னை நட்சத்திர ஹோட்டலில் ஆபாச பார்ட்டி: 2 பேர் கைது
சென்னை:
சென்னை பார்க் ஷெரட்டன் ஹோட்டலின் பாரில் நடந்த படு ஆபாசமான டான்ஸ் பார்ட்டியைத் தொடர்ந்து அந்த ஹோட்டலின்இரு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாப்பூரில் உள்ள இந்த ஹோட்டலில், சென்னையில் இயங்கும் பல எம்.என்.சி. நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குபார்ட்டிகள் நடத்தப்படுகின்றன. வார இறுதியில் நடக்கும் இந்த பார்ட்டிகளில் போதையேற்றிக் கொண்டு உடைகளைக்கலைந்துவிட்டு ஆண், பெண் ஊழியர்கள் கும்மாளம் போடுவது வழக்கமாகி வருகிறது.கடந்த வாரத்தில் நடந்த ஒரு பார்ட்டில் ஆபாசம் எல்லை மீறியது. இந்த பார்ட்டியை படம் பிடித்த சிலர் அந்தப் படங்களைபத்திரிக்கைகளுக்கு வழங்கினர்.
ஆண், பெண் ஊழியர்கள் சிறிய மேலாடையுடன் மெளத் கிஸ் அடிப்பது, பெண்கள் கட்டிப் பிடித்துக் கொண்டு மது குடிப்பதுஉள்பட எல்லை மீறிய படங்கள் அதில் அடக்கம். அதில் பிரசுரிக்கத்தக்க வகையில் இருந்த குறைந்த ஆபாசப் படங்களை மட்டும்பத்திரிக்கைகள் வெளியிட்டன. இதில் இடம் பெற்றிருந்தவர்களில் பெரும்பாலோனார் வட இந்தியர் பெண், ஆண்களே.
இந் நிலையில் இந்தப் பார்ட்டியை நடத்தப்பட்ட ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜஸ்ட் டிரஸ்ட் என்ற அமைப்பைச்சேர்ந்த ஜெபராஜ் என்பவர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து அந்த ஹோட்டலின் மதுபான, உணவுப் பிரிவின் இணை மேலாளர் வினோத் பாபு (35), வரவேற்பாளர்ஹிலாஸ் (22) ஆகியோரை நேற்றிரவில் கைது செய்தனர்.
ஆபாச பார்ட்டி நடத்தியது, லைசென்ஸ் இல்லாமல் பார் நடத்தி மதுபானம் வினியோகித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் அந்தஹோட்டல் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மயிலாப்பூர் துணை கமிஷ்னர் கலியமூர்த்தி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவரும் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications