மூங்கில் குடிசைக்கு மாறும் முதல் குடிமகன்!
டெல்லி:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தங்குவதற்காக மூங்கிலால் ஆன குடிசை ஒன்று தயாராகியுள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள மொஹல் கார்டனில் ஒரு பகுதியில் உள்ள ஆலமரத்திற்குக் கீழே இந்த மூங்கில்குடிசை அமைக்கப்பட்டுள்ளது. திரிபுராவைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் இதை வடிவமைத்துக் கட்டிக் கொடுத்துள்ளனர்.தெய்வீக குடிசை என்று இக்குடிசைக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டியுள்ளார். அவரது விருப்பத்தின் பேரில் இக்குடிசைஅமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் இங்கு தங்கி கலாம் ஓய்வெடுக்கவுள்ளார்.
புதிய திட்டங்கள் குறித்து யோசிப்பதற்கும், கவிதைகள் எழுதுவதற்கும் இந்த குடிசையை அவர் நிர்மாணித்துள்ளார்.
சமீபத்தில் மொஹல் கார்டனில் உள்ள 16 ஆலமரங்கள் உள்ள பகுதியில் நடந்து சென்றபோதுதான் இங்கு ஒரு குடிசைஅமைக்கலாமே என்ற எண்ணம் கலாக்கு உதயமானதாம்.
தற்போது குடிசை அமைந்துள்ள ஆலமரத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன்தான் நட்டு வைத்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்தக் குடிசையில் லேப் டாப் கம்ப்யூட்டருடன் மாலை நேரங்களில் அப்துல் கலாம் சில மணி நேரங்களை செலவிடஆரம்பித்துள்ளார்.
தெய்வீக குடிசை என்று பெயரிடப்பட்டுள்ளது குறித்து ஒரு புராணக் கதையை குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள்கூறுகிறார்கள்.
மார்க்கண்டேயன் தனது 16வது வயதில் மரணமடைந்தார். அப்போது அவரை சாவின் பிடியிலிருந்து சிவபெருமான் மீட்டுவந்தார். அதன் பிறகு மார்க்கண்டேயன் சாவே இல்லாத தெய்வீக நிலையை அடைந்தார்.
அந்தப் புராணக் கதையில் வரும் ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தக் குடிசைக்கு தெய்வீக குடிசை என்றுஅப்துல் கலாம் பெயர் சூட்டியுள்ளாராம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications