அமைச்சர் காட்டியது போலி கடிதம்: கருணாநிதி
சென்னை:
திமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட சாலைப் பணியாளர்கள், லஞ்சம் கொடுத்தே அந்தப் பணியில் சேர்ந்ததாக அமைச்சர்பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ள புகார் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என கருணாநிதி கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக அமைச்சர் காட்டிய கடிதங்கள் போலியானவை என்றும் கருணாநிதி கூறினார்.திமுக ஆட்சியில் சாலைப் பணியாளர்கள், திமுகவினருக்கு லஞ்சம் கொடுத்தே அந்தப் பதவியைப் பெற்றனர் என்று கூறியுள்ளஅமைச்சர் ஜெயராமன், அதற்கு ஆதாரமாக சில கடிதங்களையும் அவர் காட்டியுள்ளார்.
இதை கடுமையாக கண்டித்த திமுக உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். திமுக வரிசையில் ஒரு எம்எல்ஏ மைக்கைஉடைத்தார்.
இதையடுத்து சபாநாயகர் உத்தரவின் பேரில் திமுகவினர் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். வெளியேறமுரண்டு பிடித்த பொன்முடி, பரிதிஇளம் வழுதி ஆகியோரை இழுத்துச் சென்று வெளியேற்றினர் அவைக் காவலர்கள்.
இதை கண்டித்து மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில், சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் அன்பழகன், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, மற்றும் காங்கிரஸ் தலைவர்கள்எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்ஹேமச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில்,
சாலைப் பணியாளர்கள் திமுக ஆட்சிக் காலத்தில் லஞ்சம் கொடுத்தே பணியில் சேர்ந்ததாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக சில கடிதங்களையும் அவர் ஆதாரமாக காட்டியுள்ளார். அவை போலியான கடிதங்கள்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக மக்களுக்கு உண்மை நிலை தெரிய வேண்டும். அதற்கு நீதி விசாரணை நடத்த சபாநாயகர்உத்தரவிட வேண்டும்.
இதே போல ஒரு கடிதம் என்னிடமும் உள்ளது. 2004ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி கடலூர் மாவட்டம் மங்களூரைச் சேர்ந்த அதிமுகமாநில பொதுக் குழு உறுப்பினர் பரமசிவம், ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம் அது.
அதில், அரசு வேலை விஷயமாக ஒரு எம்எல்ஏ தன்னிடம் ரூ. 2.5 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகக்குற்றம் சாட்டி, தான் தற்கொலை செய்யப் போவதாகக் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் கோப்புகளில் அந்தக் கடிதம் இருந்தால்அந்த எம்எல்ஏ யார் என்பது அவரது நினைவுக்கு வரும்.
மேலும் இந்த ஆட்சியில் மின் வாரியத்தில் என்ஜினியர் பதவிக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் பெறப்படுவதற்கான ஆதாரங்களும்உள்ளன. விசாரணை நடத்தினால் ஆதாரம் தரப்படும். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் வழக்குத் தொடரவும் தயாராகஇருக்கின்றனர் என்றார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications