புலிகளுக்கு எதிரான அறிவிப்பு: ஐரோப்பிய யூனியனுக்கு தமிழர் கூட்டமைப்பு கண்டனம்
ஜெனீவா:
விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப் போவதாக எச்சரித்துள்ள ஐரோப்பிய யூனியனின் அறிக்கைஒருதலைப்பட்சமானது, நியாயமற்றது என சர்வதேச தமிழர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது.
ஜெனீவாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பில் 150க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர் அமைப்புகள் அடக்கம்.இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புலிகளுக்கு எதிராக அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுத்துவிட வேண்டாம் என ஐரோப்பிய யூனியன் நாடுகளைக் கேட்டுக்கொள்கிறோம். இதனால் அமைதி முயற்சிகள் ஒட்டுமொத்தமாக குலைந்து போய்விடும்.
புலிகளுக்கு எதிரான ஐரோப்பிய யூனியனின் அறிக்கை அதிர்ச்சியூட்டுவதாகவும், ஒருதலைப்பட்சமாகவும் உள்ளது.
மேலும் புலிகளின் தூதுக் குழுவினரை எந்த ஐரோப்பிய நாடும் வரவேற்காது என்ற அறிவிப்பு, தமிழர்களுக்கும் புலிகளுக்கும் தங்கள்தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லும் வாய்ப்பை தடுத்துவிடும்.
ஐரோப்பிய யூனியனின் இந்த அறிக்கையால் அந் நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளைப்பரப்பிவிடும் என்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் அரசியல் படுகொலைகளுக்கு இரு தரப்பினர் மீதுமே புகார்கள் உள்ள நிலையில் புலிகளை மட்டுமே கண்டித்து அறிக்கைவெளியிடப்பட்டுள்ளது நியாயமற்றது. இலங்கையில் மீண்டும் சிங்கள தேசியவாதப் போகும் வெறியாட்டமும் தலை தூக்கி வரும் நிலையில்ஐரோப்பிய யூனியனின் அறிக்கை அமைதி முயற்சிகளுக்கு பெரும் சேதத்தை விளைவித்துவிட்டது தான் உண்மை.
யூனியனின் அறிவிப்பு சிங்கள இனவாதிகளுக்கு பலத்தைக் கொடுத்துள்ளது. இதனால் புலிகள் மீது மேற்கொண்டு எந்தவிதமான தீவிரநடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என தமிழ் மக்கள் சார்பில் ஐரோப்பிய நாடுகளை எங்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications