தங்கருக்கு ஒரு நீதி, குஷ்புவுக்கு ஒரு நீதியா? பாமக கேள்வி
திண்டிவனம்:
தங்கர்பச்சான் அநாகரீகமாக பேசி விட்டார் என்று கொதித்து, கொந்தளித்து, அவரை நடிகர் சங்கத்திற்கு வரவழைத்து காலில்விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த நடிகர் சங்கம், குஷ்பு விவகாரத்தில் தனக்கு சம்பந்தமில்லை என்று கூறி ஒதுங்கிக்கொண்டது ஏன் என்று பாமக கேள்வி எழுப்பியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நல்லியகோடன் வெளியிட்டுள்ள அறிக்கை:தங்கர்பச்சான் தெரிவித்த கருத்து தொடர்பாக, தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் பண்பாட்டை காப்பதற்காகவே பிறவிஎடுத்ததைப் போல ஆர்ப்பரித்தனர். அவர் வெளியில் மன்னிப்பு கேட்ட பிறகும் அவரை நடிகர் சங்கத்திற்கு நேரில் வரவழைத்துமன்னிப்பு கேட்க வைத்தனர்.
அந்த சங்கத்திற்கும், சங்கத் தலைவருக்கும் என்ன ஆயிற்று? நடிகை குஷ்பு கற்பின் இலக்கணம் இதுதான் என்று அறிவித்துள்ளார்.ஒரு இயக்குனர், நடிகையைப் பற்றிக் கருத்து சொன்னால் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம், அறிக்கை போர் நடக்கிறது. ஆனால் ஒருநடிகை, ஒட்டுமொத்த தமிழ்ப் பெண்களையும், படித்த ஆண்களையும் கேவல்பபடுத்தி பேட்டி கொடுத்தால் நடிகர் சங்கம்ஆழ்கடல் அமைதி காக்கிறது.
தங்கர்பச்சான் பத்திரிக்கை வாயிலாக மன்னிப்பு கேட்டபோது நடிகர் சங்கத்தினர் திருப்தி அடையவில்லை. நடிகர் சங்கத்திற்குநேரில் வரவழைத்து, காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்தனர்.
இப்போது குஷ்பு மட்டும் டிவியில் மன்னிப்பு கேட்டால் போதுமா? தங்கர்பச்சானுக்கு ஒரு நீதி, குஷ்புவுக்கு ஒரு நீதியா? என்றுகேள்வி எழுப்பியுள்ளது பாமக.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications