அமைச்சர் மிரட்டி வாங்கிய கடிதம்?
கோவை:
திமுகவினருக்கு லஞ்சம் கொடுத்ததாக தங்களை மிரட்டி எழுதி வாங்கிய கடிதத்தைத்தான் அமைச்சர் ஜெயராமன் சட்டசபையில்காட்டியுள்ளதாக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 3 சாலைப் பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திமுகவினருக்கு லஞ்சம் கொடுத்துத் தான் சாலைப் பணியாளர்கள் வேலைகளை வாங்கினர் என்று சட்டசபையில் தெரிவித்தஅமைச்சர் ஜெயராமன், அதற்கு ஆதாரமாக கதிரவன், பரமசிவன், திருமூர்த்தி ஆகிய சாலைப் பணியாளர்கள் எழுதிய கடிதத்தைசட்டசபையில் படித்தார்.இந் நிலையில் இந்த விவகாரகம் இப்போது அதிமுகவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது.
பொள்ளாச்சியைச் சேர்ந்த சாலைப் பணியாளர்கள் கதிரவன், ரஜினிகாந்த், ஸ்ரீரங்கராஜ் ஆகிய 3 பேரும் இதுகுறித்துக் கூறுகையில்,
அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் அழைப்பதாக கூறி அதிமுக நிர்வாகிகள் சிலர் எங்களை அவரிடம் அழைத்துச் சென்றனர்.
அப்போது அமைச்சர் எங்களிடம், திமுகவினர் லஞ்சம் வாங்கிக் கொண்டுதான் எங்களுக்கு வேலை கொடுத்ததாக எழுதித்தருமாறு கூறினார்.
அவருடன் இருந்த அதிமுக நிர்வாகிகளும் அவ்வாறே எழுதித் தருமாறு கூறி எங்களை மிரட்டினர். அமைச்சர் முன்னிலையில் மிகக்கடுமையாக மிரட்டப்பட்டதால் வேறு வழியில்லாமல் நாங்கள் வெற்றுத் தாளில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தோம்.
பின்னர் அதில் உள்ள வாசகங்களை அவர்களாகவே எழுதிக் கொண்டனர்.
மேலும் எங்களது அடையாள அட்டைகளையும் அதிமுக நிர்வாகிகள் பறித்துக் கொண்டனர். எங்களிடம் மிரட்டி வாங்கப்பட்டகடிதத்தைத்தான் சட்டசபையில் அமைச்சர் காட்டியுள்ளார் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சர்ச்சையால் சாலைப் பணியாளர் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications