சட்டசபையில் இருந்து மார்க்சிஸ்ட், திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்
சென்னை:
தமிழக சட்டசபையிலிருந்து திமுக உறுப்பினர்கள் பொன்முடி, பரிதி இளம்வழுதி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதைக் கண்டித்து பாஜகவைத் தவிர மற்ற எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.இன்று காலை கேள்வி நேரத்திற்குப் பின்னர் போக்குவரத்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், நெய்வேலி அணல்மின் கழக ஊதிய ஒப்பந்தம் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள்கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அமைச்சருக்கு எதிராக உரிமைப் பிரச்சினையை அவர்கள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்கு சபாநாயகர்காளிமுத்து அனுமதி கொடுக்கவில்லை. இதனால் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்றுசபாநாயகரை எதிர்த்து கோஷமிட்டனர்.
இதைத் தொடர்ந்து அவர்களை அவையிலிருந்து வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இந் நிலையில் திமுக உறுப்பினர்கள் பொன்முடி, பரிதி இளம்வழுதி ஆகியோர் எழுந்து சாலைப் பணியாளர்பிரச்சினை குறித்து உரிமைப் பிரச்சினை கொண்டு வந்தனர்.
ஆனால், இது ஏற்கனவே முடிந்து போன விஷயம், மீண்டும் எழுப்ப முடியாது என்று கூறி அதை சபாநாயகர்காளிமுத்து நிராகரித்தார்.
இதனால் கோபமடைந்த பரிதி, பொன்முடி இருவரும் சபாநாயகரை நோக்கி ஆவேசமாக பேசினர். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு காளிமுத்து உத்தரவிட்டார்.
அதன்படி இருவரும் வலுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
இதைக் கண்டித்து திமுக, பாமக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.காங்கிரஸ் கட்சியினர் இன்று முழுவதும் (இன்றுதான் கடைசி நாள்) சபையைப் புறக்கணிப்பதாக அறிவித்துவெளியேறினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications