ஓகேனக்கலை பாதுகாக்க போராட்டக் குழு
ஓகேனக்கல்:
சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஓகேனக்கல் பகுதியில் தமிழக அரசு அமைத்துள்ள கம்பி வேலிகளை தகர்த்து எறிந்து போராட்டம்நடத்தப் போவதாக கன்னடர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் ஓகேனக்கல்லில் உள்ள பல பகுதிகளை தங்களுக்குச் சொந்தமானது என கர்நாடக அரசு கூறி வருகிறது.இதனால் அங்கு சர்ச்சை ஏற்பட்டுள்ளது.சில நாட்களுக்கு முன்பு கர்நாடகத்தின் சாம்ராஜ் நகர் மாவட்ட கன்னடர் சங்கம் சர்ச்சைக்குரிய பகுதியில் ஊடுறுவ முயன்றது.ஆனால் தமிழக பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டதால் அவர்கள் உள்ளே வருவதைத் தவிர்த்துவிட்டனர்.
இந் நிலையில் மீண்டும் சர்ச்சைக்குரிய பகுதிக்குள் ஊடுறுவி, தமிழக அரசு சுற்றுலாப் பயணிகள் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ளகம்பித் தடுப்பு வேலிகளை உடைத்து எறியப் போவதாக கன்னடர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தங்களது போராட்டத்தின்போது ஏதாவது விபரீதம் நடந்தால் அதற்கு தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் தான் பொறுப்பேற்கவேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஓகேனக்கல்லில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதற்கிடையே, தமிழகத்தில் திமுக தலைமையில் ஓகேனக்கலைக் காக்கும் போராட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பெண்ணாகரத்தில் திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள்ஆகியவற்றின் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் கூடி இதுதொடர்பாக விவாதித்தனர்.
ஓகேனக்கல் தமிழகத்திற்குச் சொந்தமானது. அதை விட்டுக் கொடுக்க முடியாது என்று "க் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications