செக்ஸ் சர்வே: இந்தியா டுடே, அவுட்லுக் மீது வழக்கு
டெல்லி:
செக்ஸ் தொடர்பான கருத்துக் கணிப்பை வெளியிட்ட இந்தியா டுடே மற்றும் அவுட்லுக் இதழ்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில்பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தியா டுடே இதழ் ஆண்டுதோறும் செக்ஸ் குறித்த கருத்துக் கணிப்பை நடத்தி வருகிறது. இதில் ஆண், பெண்களிடம்அவர்களது செக்ஸ் வாழ்க்கை குறித்து பல கேள்விகள் கேட்கப்படும்.இந்த வருடம் நடத்தப்பட்ட இந்தியா டுடே கருத்துக் கணிப்பில், தனித்து வாழும் பெண்கள் பிற ஆண்களிடம் செக்ஸ் உறவுவைத்துக்கொள்வது அதிகரித்து இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்துக் கருத்துக் கூறப் போய்த்தான் குஷ்பு வம்பில் சிக்கிக் கொண்டார்.
எத்தனை முறை சுய இன்பம் அனுபவிப்பீர்கள், உறவு முடிந்தவுடன் என்ன செய்வீர்கள், உறவுக்கு முன்பு என்ன மாதிரியானஆயத்த விளையாட்டு விளையாடுவீர்கள் என்றெல்லாம் இந்த கருத்துக் கணிப்பில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
இதேபோன்ற ஒரு கருத்துக் கணிப்பை அவுட் லுக் இதழும் வெளியிட்டுள்ளது. இதிலும் பல நூதனமான கேள்விகள் பெண்களிடம்கேட்ககப்பட்டு கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பையொட்டி வெடித்த குஷ்பு விவகாரம் இப்போது டெல்லியிலும் எதிரொலித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த சுப்ரியா அகர்வால் என்ற வழக்கறிஞர், இந்தியா டுடே, அவுட்லுக் இதழ்கள் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது மனுவில், இரு கருத்துக் கணிப்புகளும் வக்கிரமானவை, பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான கேள்விகள் அதில்இடம் பெற்றுள்ளன, எனவே இரு பத்திரிக்கைகளுக்கும் கருத்துக் கணிப்பு நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்றுகோரப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் விஜேந்தர் சர்மா, ரேகா ஜெயின் ஆகியோர் இரு இதழ்களும் வரும் டிசம்பர் 7ம் தேதிக்குள் பதில்அளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், இந்திய பத்திரிக்கை கவுன்சில் ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்பஉத்தரவிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications