மாநில உழவர் மாநாடு: ஜெவின் தேர்தல் அதிரடி
சென்னை:
வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து மாபெரும் விவசாயிகள் மாநாட்டை நடத்தவும், அதில் விவசாயிகளுக்குஏராளமான சலுகைகளை அறிவிக்கவும் அதிமுக திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து வரும் 5ம் தேதி மாநில உழவர் மாநாடு, விளையாட்டுப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொருட்காட்சி நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் இந்த மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து விவசாயிகளைக்கொண்டு வந்து குவிக்கும் வேலை அரசு அதிகாரிகளிடம் தரப்பட்டுள்ளது.சுமார் 50,000 பேர் வரை பங்கேற்கவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு பல கோடிகள் செலவிடப்பட்டு வருகின்றன. இந்த மாநாட்டை நேருஸ்டேடியத்தின் திறந்தவெளி அரங்கில் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால், கருணாநிதி முதல்வராக இருந்தாது நேரு விளையாட்டு அரங்கில் அவருக்கு திரைப்படத் துறையினர் விழா நடத்தஇருந்த நிலையில் அதை எதிர்த்து வழக்குப் போட்டார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
திறந்த வெளி விளையாட்டு அரங்கில் விழா நடத்தினால் அரங்கு சேதமடையும் என ஜெயலலிதா தனது மனுவில் கூறியிருந்தார்.அந்த விழாவை நீதிமன்றம் தடை செய்யாவிட்டாலும், இனிமேல் இது போன்ற விழாக்களுக்கு அந்த அரங்கை பயன்படுத்தஅனுமதி கோரக் கூடாது என்று கருத்துத் தெரிவித்திருந்தது.
இதையடுத்து வெளி அரங்குக்குப் பதிலாக அந்த விழாவை உள் அரங்கில் நடத்த கருணாநிதி உத்தரவிட்டார்.
இந் நிலையில் அதே வெளி அரங்கில் தான் உழவர் விழாவை நடத்த ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். இதற்கு கருணாநிதி கடும்கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், விழாவை அங்கு நடத்தத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்கு தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,
ஸ்டேடியம் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் விழாவை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிகலைநடத்துவதால் ஸ்டேடியம் பாதிக்கப்படாது. அரங்கின் சர்வதேசத் தரம் பாதிக்கப்படும் என்று கூறப்படுவது கற்பனையானகுற்றச்சாட்டு. ஊரக விளையாட்டுப் போட்டிகளை இங்கு நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் தினகரன், தணிகாசலம் முன் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications