நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கள்ள மார்க்கெட்டில் ஜோர் விற்பனை
டெல்லி:
நாடு முழுவதும் சமையல் எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
சென்னை, பெங்களூர் உள்பட பல நகர்களில் கள்ள மார்க்கெட்டில் சிலிண்டர்கள் இரண்டு மடங்கு விலைக்குவிற்கப்பட்டு வருகின்றன.இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், ஐ.பி.பி. ஆகிய நிறுவனங்கள் ஆண்டுதோறும் 1.5 கோடி டன் சமையல் எரிவாயு சப்ளை செய்து வருகின்றன.
கடந்த சில மாதங்களாக சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. சர்வதேச சந்தையில் எண்ணைவிலைக்கு கடும் உயர்வு ஏற்பட்டதன் காரணமாகவும், ரிலையன்ஸ் நிறுவன எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள்முடப்பட்டதன் காரணமாகவும் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.
இந்தியா முழுவதுமே காலியான சிலிண்டருக்கு பதில் புதிய சிலிண்டர் பெறுவதில் ஒரு வாரம் முதல் 3 வாரம் வரைகால தாமதம் ஏற்படுகிறது.
இருந்தாலும் தட்டுப்பாட்டை சமாளிக்க 5.65 லட்சம் டன் சமையல் காஸ் இறக்குமதி செய்ய எண்ணை நிறுவனங்கள்முடிவு செய்துள்ளன.
தீபாவளி பண்டிகை காலமான அடுத்த மாதத்தில் சமையல் கியாஸ் தட்டுப்பாடு காரணமாக 8.50 கோடிகுடும்பங்கள் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
சர்வதேச விலை உயர்வு ஒரு காரணமாக இருந்தாலும், காஸ் டீலர்கள் பொது மக்களுக்கு வழங்க வேண்டியசிலிண்டர்களை கள்ளச் சந்தையில் விற்றுத் தின்ன ஆரம்பித்துள்ளனர்.
வீடுகளுக்கு வழங்க வேண்டிய சிலிண்டர்களை கடைகளுக்கு விற்று வரும் இவர்கள், பொது மக்களிடம் 2 மடங்குபணம் வாங்கிக் கொண்டு முறைகேடாக சிலிண்டர்களை விற்று வருகின்றனர்.
இது குறித்த புகார்களை எண்ணெய் நிறுவனங்களும் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றன. காஸ்ஏஜென்சிகாரர்களிடம் இருந்து இந்த நிறுவன அதிகாரிகளுக்கு மாமூல் போய் விடுவதே இதற்குக் காரணமாகும்.
சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பையில் காஸ் ஏஜென்சிகள் செயற்கையான காஸ் தட்டுப்பாட்டை ஏற்படுத்திகொள்ளை லாபம் அடித்து வருகின்றனர்.
இது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் கூறுகையில்,
கள்ள மார்க்கெட்டில் சிலிண்டர்கள் விற்கப்படுவதை தடுக்க சில கட்டுப்பாடுகளை விதித்தோம், அதன் விளைவுஎதிர்மறையாகிவிட்டது.
வீடுகளுக்கான சிலிண்டர்களை கடைகளுக்கு கள்ள மார்க்கெட்டில் விற்பது மிகப் பெரிய குற்றம். இதைஉடனடியாகத் தடுக்க வேண்டும் என்றார்.
இந்த மாதம் மட்டும் 1 லட்சம் டன் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர்வினியோகிப்பாளர்கள் புதிய சிலிண்டர்களைப் பதிவு செய்யப் போகும் பொது மக்களிடம் அலட்சியம் காட்டிவருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications