ஜெவுக்கு ராமதாசின் எலிக்கறி நினைவூட்டல்
சென்னை:
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதில் நாட்டிலேயே தமிழகம் 3வது இடத்தில் இருக்கிறது. இது தான் விவசாயிகளுக்கு ஜெயலலிதாசெய்துள்ள சாதனையா என்று பாமக தலைவர் ராமதாஸ் கேட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பல கோடி அரசுப் பணத்தை செலவு செய்து நேரு விளையாட்டு அரங்கில் விவசாயிகள் மாநாட்டை நடத்தியுள்ளார் ஜெயலலிதா. இதில்விவசாயிகளின் வட்டிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
நடந்தது விவசாயிகள் மாநாடே அல்ல. அதிகாரிகளும் அதிமுகவினரும் அரசுப் பணத்தில் பஸ்களை ஏற்பாடு செய்து சென்னைக்குஆட்களைக் கூட்டி வந்து நடத்திய மாநாடு. இது ஒரு போலியான விவசாயிகள் மாநாடு என்பதால் தான் வட்டிக் கடன் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளதாக பொய்யான தகவலை துணிந்து சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.
இந்த அறிவிப்பு எந்த அளவுக்கு உண்மையானது என்பது விவசாயிகளுக்குத் தெரியும். கடன் தள்ளுபடி என்பது முதல்வரின் ஏமாற்றுவேலை.
நானும் ஒரு விவசாயிகள் தான் என்றும் விவசாயிகள் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளதாகவும் ஜெயலலிதாபேசியிருக்கிறார். இதே ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டு உயிர் பிழைக்க வேண்டி இருந்தது என்பதைநாடறியும்.
ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஜுரம் அடிக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் தான் விவசாயிகள் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார். கடன்சுமையால் குடும்பத்தோடு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் 3வது இடத்தில் இருக்கிறது. இது தான் அதிமுக அரசின்சாதனை.
இந்த ஆட்சியை அகற்றினால் தான் விவசாயிகளுக்கு உண்மையான நிவாரணம் கிடைக்கும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications