இந்தியா, பாகிஸ்தானுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல்
டெல்லி:
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும் என்றுஅமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் காண்டலீஸ்ஸா ரைஸ் தெரிவித்துள்ளார்.
வெளியுறுவுத்துறை அமைச்சர் நட்வர் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரைஸ், இந்தியாவுக்கு நிவாரணஉதவிகளை வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் இந்தியாவில் ஏற்பட்டுள்ளபொருள் மற்றும் உயிர் சேதத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.இதற்கிடையே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு பிரிட்டன் 1 லட்சம்பவுண்டு நிதியுதவி வழங்கியுள்ளது. மேலும் 50 மீட்புப் பணியாளர்களையும் அனுப்பியுள்ளது.
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், இந்தியாவுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களும் இரங்கல்தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தங்களது பிரார்த்தனைகளைத் தெரிவிப்பதாகஅமெரிக்க அதிபர் புஷ் மற்றும் அவரது மனைவி தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய அதிபர் புதின் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், ஜம்மு மற்றும் காஷ்மீரில்நிலநடுக்கத்தால் எண்ணற்ற குடும்பங்கள் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும், அதிர்ச்சியும்அடைந்தேன்.
அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதே போல் ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் தமது இரங்கலில், இந்த ஈடு செய்ய முடியாதஇழப்புக்காக மிகவும் வருந்துகிறேன், இயற்கை சீற்றத்தால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனதுஅனுதாபங்களைத் தெவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications