பூகம்பத்தில் உயிரிழந்தவருக்கு கருணாநிதி இரங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பூகம்ப துயர் தணிப்பு பணிகளுக்கு திமுக முழு அளவில் துணை நிற்கும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சமீபத்திய பூகம்பத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை- பச்சை குழந்தைகள் முதல் படு கிழங்கள் வரையில்பறிகொடுத்து விட்டு எஞ்சியுள்ளோர் ஏங்கி தவித்துக் கொண்டிருக்கிறோம். காஷ்மீர் செய்திகள் கண்களைகுளமாக்குகின்றன.
பாகிஸ்தானில் இயற்கையின் எதிர்பாராத பயங்கரத் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைஎட்டுமோ என்று உலகமே அஞ்சுகிற அளவுக்கு அந்த நாடு அவலத்தின் பிடியில் உள்ளது.
இயற்கையின் இந்தக் கொடுஞ் சீற்றத்தால் உயிர் இழப்புகளுக்கும், உடைமை இழப்புகளுக்கும் ஆளானஇந்தியா-பாகிஸ்தான் மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன்,துயர் துடைப்பு பணிகளில் ஆக்கபூர்வமாக துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications