சுயநிதி மருத்துவ கல்லூரி சேர்க்கையில் முறைகேடு: எதிர்த்து மாணவி வழக்கு
சென்னை:
சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவி சரண்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல்செய்துள்ளார். அதில்,கே. நவீன், ஆஸ்ட்டோரியா ஆகிய மாணவர்களிடம் நன்கொடை பெற்றுக் கொண்டு மருத்துவ கல்லூரி கமிட்டிசீட் வழங்கியுள்ளது. தகுதி அடிப்படையில் அந்த மாணவர்களின் சேர்க்கை நடைபெறவில்லை.
நுழைவுத் தேர்வில் நான் 288.42 கட்ஆப் மதிப்பெண் எடுத்துள்ளேன். ஆனால் என்னைவிட குறைவாக கட்ஆப்மதிப்பெண் பெற்றுள்ள இந்த மாணவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நுழைவுத் தேர்வு என்பதுவெறும் கண்துடைப்பு நாடகம் என்பது உறுதியாகிறது.
இந்த மாணவர் சேர்க்கையில் நடந்துள்ள முறைகேட்டை விசாரித்து சம்பந்தப்பட்வர்கள் மீது உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி முருகேசன் முன் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி சுயநிதி மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைத்துறைச் செயலாளர் மற்றும் உறுப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications