விழா பந்தல் சரிந்தது: ப.சிதம்பரம் உயிர் தப்பினார்
இளையாங்குடி:
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசிக் கொண்டிருந்த மேடையின் இரும்புத் தகடுகளால் ஆன பந்தல் பலத்தமழை, காற்றில் சரிந்து விழுந்தது. இதில் சிதம்பரம் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில், இந்தியன் ஆயில் கழகத்தின் காஸ் நிரப்பும் மையத் தொடக்க விழாநடந்தது. தமிழகத்தின் 11வது காஸ் நிரப்பும் மையம் இது.விழாவில் அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
ப.சிதம்பரம் பேசத் தொடங்கியபோது மழை பெய்ய ஆரம்பித்தது, மிக திடீரென மழை வேகம் பிடித்தது. இந்நிலையில் வீசிய பயங்கர காற்றில் மேடைக்கு மேலே போடப்பட்டிருந்த இரும்பு தகடுகளால் ஆன பந்தல்அப்படியே சரிய ஆரம்பித்தது.
இதைப் பார்த்த இந்தியன் ஆயில் கழக அதிகாரிகளும், போலீஸாரும் விரைந்து சென்று ப.சிதம்பரத்தைஅங்கிருந்து அகற்றினர். ஆனால் அதற்குள் பந்தல் முழுமையாக கீழே விழுந்துவிட்டது.
இதில் சிதம்பரத்திற்கு லேசான சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன. சில மூத்த இந்தியன் ஆயில் கழகஅதிகாரிகளுக்கும் காயம் ஏற்பட்டது. விழாவைக் காண வந்திருந்த பல பெண்களும் (மேடைக்கு அருகில்நின்றிருந்தவர்கள்) லேசான காயமடைந்தனர்.
காயமடைந்த சிதம்பரம், உடனடியாக சிவகங்கை வேலு நாச்சியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுமுதலுதவி அளிக்கப்பட்டது. அதன் பிறகு மதுரை சென்ற அவர் அங்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனையில்சிகிச்சை பெற்றார்.
காயமடைந்த பொதுமக்கள், அதிகாரிகள், ஹிந்து பத்திரிக்கை புகைப்படக்காரர் ஜேம்ஸ், என்டிடிவி கேமராமேன்சந்திரன் உள்ளிட்ட அனைவரும் இளையாங்குடி, சிவகங்கை, பரமக்குடி ஆகிய ஊர்களில் உள்ளமருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த பந்தல் இரும்புத் தகடுகள், கம்பிகளால் ஆனது. இதனால் தான் இவ்வளவுபேருக்கு காயம் ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக சிதம்பரம் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டதால் தப்பித்தார்.












Click it and Unblock the Notifications