கோவை: பாறை உருண்டு விழுந்து 4 பேர் சாவு
கோவை:
கோவையில் கன மழைக்கு பாறை உருண்டு விழுந்து 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
தமிழகம் முழுவதும் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. கோவையிலும் கன மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் கல்லுக்குழி என்ற இடத்தில் கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பெரிய பாறை ஒன்றுஉருண்டு குடிசைப் பகுதியில் விழுந்தது.இதில் குடிசை வீட்டில் இருந்த நான்கு பேர் உடல் நசுங்கி இறந்தனர். இவர்களில் குப்பம்மாள், மாரத்தாள் ஆகியஇரு பெண்களின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. ராஜன், மங்கம்மாள் ஆகியோரது உடல்கள் இன்னும்மீட்கப்படவில்லை. இருவரது உடல்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு நசுங்கி விட்டது.
இந்த சம்பவத்தில் ரங்கநாதன் என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாறைஉருண்டு விழுந்ததால் 14 குடிசைகள் சேதமடைந்துள்ளன.
சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டதும், அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செ.மா. வேலுச்சாமி, தாமோதரன்,கோவை மேயர் மலரவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துக்கம் விசாரித்தனர். காயமடைந்தரங்கநாதனை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டுள்ள 14 குடும்பங்களுக்கு அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும்வழங்கப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications