கேஸ் சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்தது: 4 சிறுவர்கள் பலி
சென்னை:
சென்னையில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில், கட்டிடம் இடிந்த விழுந்து 4 சிறுவர்கள் பலியானார்கள்.
எம்.ஜி.ஆர். நகர் சூளை பள்ளம் அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் ராமு. இவர் காலி பெயிண்ட் டப்பாக்களைவாங்கி விற்கும் தொழில் செய்கிறார். வீட்டின் மேல் மாடியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.கீழ்தளத்தில் உள்ள வீட்டில் ராஜேந்திரன் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவர்களின் வீட்டிற்குபின் பக்கம் ஏராளமான பேர் குடிசைகளில் வசித்து வந்தனர்.
ராஜேந்திரன் வேலைக்கு சென்றவுடன், அவரது மனைவி பானு சமையல் செய்து முடித்து விட்டு கேஸ் சிலிண்டரைமூடாமல் சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் சமையல் கியாஸ் கசிந்து வீடு முழுவதும் நிரம்பியிருந்தது.
இது தெரியாமல், வீட்டிற்கு வந்த ராஜேந்திரன் மின்சார சுவிட்சை போட்டார். உடனே வீட்டிற்குள் பரவியிருந்தகேஸ் குபீர் என தீப்பிடித்தது. அடுத்த கணமே சமையல் கேஸ் சிலிண்டரும் வெடித்து சிதறியது.
ராஜேந்திரன் வீட்டில் பற்றிய தீ பக்கத்தில் உள்ள பெயிண்ட் டப்பாக்காளின் குடோனுக்கு பரவியது. இதனால்ராஜேந்திரன் வீட்டு பின் பக்க சுவர், குடோனின் பின் பக்க சுவர்கள் ஒரே நேரத்தில் இடிந்து குடிசைகளின் மீதுவிழுந்தது.
அங்கு குடிசை வீட்டு குழந்தைகள் சுவரையொட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அதனால் சுவரின்இடிபாடுகளில் சிக்கி ராஜா(வயது 12), அரி (வயது 11), முனியப்பன் (வயது 4), வெங்கடேசன் (வயது 13) ஆகிய4 சிறுவர்கள் இறந்தனர்.
சுவர் இடிந்து விழுந்த தெரு குறுகலாக இருந்ததால் தீயணைப்பு படையினரும், போலீசாரும் இடிபாடுகளை அகற்றசிரமப்பட்டனர். பிறகு புல்டோசர் மூலம் இடிபாடுகளை அகற்றி இறந்த சிறுவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாகமீட்கப்பட்டன.
இது தொடர்பாக, அனுமதி பெறாமல் பாதுகாப்பற்ற முறையில் வீடு கட்டியுள்ள அந்த வீட்டின் உரிமயாளர் ராமுஎன்பவரை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications