பிஇ: கல்லூரிகளில் அழகி போட்டிக்கு தடை
சென்னை:
பொறியியல் கல்லூரிகளில் அழகிப் போட்டி நடத்த அண்ணா பல்கலைக் கழகம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியதாவதுபொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் படிப்பில் கவனத்தை சிதற விடாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளைமேற்கொள்ளப்பட்டன. முதல் கட்டமாக செல்போன் கல்லூரிகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பிறகுஉடைக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.
அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதைச் சார்ந்த கல்லூரிகளில் நடக்கும் கலாசார நிகழ்ச்சிகள் நமதுபண்பாட்டை காக்கும் விதமாக சினிமா பாடல்களுக்கு ஆபாசமாக ஆடுவது அதிகரித்து வந்தது. மேலும் நடனம்ஆடுவதற்கு ஒத்திகை என்ற பெயரில் வகுப்புகளைப் புறக்கணிப்பதும் படிப்பில் கவனம் சிதறுவதுமாக இருந்தது.
எனவே சினிமா பாட்டுக்கு ஏற்றபடி நடனம் ஆட தடைவிதிக்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக அண்ணாபொறியியல் கல்லூரி மற்றும் அதனை சார்ந்த அனைத்து கல்லூரிகளிலும் அழகி மற்றும் ஆடை அலங்கார போட்டிநடத்த தடை விதிக்கப்படுகிறது.
மேலும் 30 சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அந்த கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து கல்லூரிகளில் போமான வசதியுள்ளதா என்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் அந்தக் கல்லூரிகள்போதிய வசதிகள் செய்து உள்ளதா என்பது பற்றி ஆய்வு நடத்த அண்ணா பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்றபேராசிரியர்கள் கொண்ட 90 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் மோசடி தொடர்பாக 43 மாணவர்களைப் போலீஸ் கைது செய்துள்ளது. அந்த மாணவர்கள் மீதுஅண்ணா பல்கலைக் கழகத்தின் குழு நடத்திய விசாரணை அறிக்கையை சிண்டிகேட் விசாரித்து நடவடிக்கைஎடுக்கும்.
மாணவர்களுக்க வீடியோ கான்பரன்ஸ் மூலம் பாடம் நடத்தும் திட்டம் முதல் கட்டமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் விரைவில் அறிமுகமாகும் என்றார் வ்ஸவநாதன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications