மேட்டூர் அணைக்கு ஆபத்தில்லை: பொதுப் பணித்துறை
சேலம்:
மேட்டூர் அணைக்கு அபரிமிதமான தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணை உடையும் ஆபத்து ஏதும் இல்லை என்றுபொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்குவிநாடிக்கு 2 லட்சம் கன அடி என்ற அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டுள்ளது.இதனால் மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 2.30 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. கடல் போல காணப்படும்மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டள்ளதால் அப்பகுதியே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாகும். ஆனால் அணையில் தற்போது 121.85 அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. இதனால்அணை உடையலாம் என்ற பீதி மேட்டூர் பகுதியில் நிலவுகிறது. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதை மறுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கூறுகையில், மேட்டூர் அணையின் மொத்த நீர் இருப்பு 120 அடிதான்என்றாலும் கூடுதலாக 5 அடி வரை அதாவது 125 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம். தற்போது அணையில் 121.85அடிதான் நீர் உள்ளது.
அணைக்கு வரும் நீர் அத்தனையும் அப்படியே திறந்து விடப்படுகிறது. எனவே அணை உடையும் என்ற பேச்சுக்கே இடமில்லை.எனவே பொதுமக்கள் அணை உடையுமோ என்று அஞ்சத் தேவையில்லை என்றனர்.
44 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 2.30 கன அடி என்ற அளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications