ஜெயேந்திரர் வழக்கு பாண்டிச்சேரிக்கு மாற்றம்!
டெல்லி:
சங்கரராமன் கொலையில் ஜெயேந்திரர் உள்ளிட்டவர்கள் மீதான வழக்கு விசாரணையை பாண்டிச்சேரி நீதிமன்றத்துக்கு மாற்றிஉச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
சங்கரராமன் கொலை வழக்கை தமிழக நீதிமன்றத்திலிருந்து வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி ஜெயேந்திரர் சார்பில்உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.தன் மீது முதல்வர் ஜெயலலிதா தனிப்பட்ட கவனம் செலுத்துவதால் தமிழகத்தில் விசாரணை நடந்தால் நியாயம் கிடைக்காது எனஜெயேந்திரர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி ஆர்.சி.லஹோத்தி, நீதிபதி ஜி.பி. மாத்தூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது.
இந்த மனு மீது விசாரணை நடந்தபோது, இந்த வழக்கில் விடுமுறை நாளில் போலீசார் குற்றப் பத்திரிக்கையை அவரசமாகதாக்கல் செய்தது ஏன் என்பது உள்பட அரசுக்கு எதிராக பல்வேறு சந்தேகங்களை நீதிபதிகள் கிளப்பினர்.
விடுமுறை தினத்தில் ஏன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு வந்தார், அன்று ஏன் அவசரமாக குற்றப் பத்திரிக்கை தாக்கலானது,மாஜிஸ்திரேட் நிர்பந்திக்கப்பட்டாரா என தமிழக அரசுக்கு பல கேள்விகளை தலைமை நீதிபதி கேட்டார்.
இந்தக் கேள்விகளால் வழக்கு வேறு மாநிலத்துக்கு மாறப் போவது உறுதி என்ற உறுதிப்பாட்டுக்கு வந்த தமிழக அரசு, வழக்கைவேறு மாநிலத்துக்கு மாற்றுவதாக இருந்தால் அதை பாண்டிச்சேரிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.
முதலில் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றவே கூடாது என்று தமிழக அரசு கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இதை ஆந்திர மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என ஜெயேந்திரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனுவின்மீது கடந்த 20ம் தேதி விசாரணை முடிந்து தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இந் நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், இந்த வழக்கை தமிழகத்தில் நடத்தினால் உள்துறை பொறுப்பை கையில்வைத்திருக்கும் முதல்வர் ஜெயலலிதாவால் பிரச்சனை வரும் என்ற ஜெயேந்திரர் தரப்பு வாதம் ஏற்கத்தக்கதாகவே உள்ளது.இதனால் இந்த வழக்கின் விசாரணை செங்கல்பட்டு செசன்ஸ் நீதிமன்றத்தில் இருந்து பாண்டிச்சேரி செசன்ஸ் நீதிமன்றத்துக்குமாற்றப்படுகிறது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.


Click it and Unblock the Notifications
