மதுரையில் 20 கண்மாய்கள் உடையும் அபாயம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
![]() |
மதுரையில் பெய்து வரும் கன மழை காரணமாக ஒத்தக்கடை அருகே 20 கண்மாய்கள் நிரம்பியுள்ளன. அவை உடைந்து விடாமல்தடுக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால வேகத்தில் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் பெய்து வரும் கன மழைக்கு மதுரையும் தப்பவில்லை. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக,மதுரையைச் சுற்றிலும் உள்ள பல்வேறு கண்மாய்கள் நிரம்பி வருகின்றன.
![]() |
இந் நிலையில் ஒத்தக்கடையைச் சுற்றிலும் உள்ள 20 கண்மாய்கள் ஒரே நாளில் நிரம்பின. இதனால் கண்மாய்கள் உடையும்அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கண்மாய்கள் உடைவதைத் தடுக்கும் வகையில் மாறு கால்வாய்கள் மூலம் கண்மாய்நீர் வெளியேற்றப்படுகிறது.
கண்மாய்கள் நிரம்பியதால் அருகாமைப் பகுதிகளில் நீர் புகுந்து வருகிறது. இதன் காரணமாக ஒத்தக்கடை மற்றும் சுற்றியுள்ளபகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது.














Click it and Unblock the Notifications