கடலை அடைந்தது வெள்ளம்: நாகையில் 10,000 பேர் வெளியேற்றம்
நாகப்பட்டணம்:
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பல்வேறு ஊர்களை காலி செய்த பின்னர் தற்போது கடலைஅடைந்துவிட்டது.
இதையடுத்து கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியை ஒட்டியுள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த 10,000 பொதுமக்கள்பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.மேட்டூர் அணையிலிருந்து திறந்து விட்ட தண்ணீர் காவிரிக் கரையோர மாவட்டங்களை கடுமையாக பாதித்துள்ளது. இந்தத்தண்ணீர் திருச்சி, ஸ்ரீரங்கத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தண்ணீர் தற்போது நாகை மாவட்டத்தை அடைந்துவிட்டது. கடலில் கலக்க ஆரம்பித்துள்ளது.
வினாடிக்கு 2.81 லட்சம் கன அடி என்ற விகிதத்தில் காவிரி நீர் கடலில் கலந்து வருகிறது.
இதனால் காவிரியும் கடலும் சந்திக்கும் முகத்துவாரப் பகுதியை ஒட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர்புகுந்துள்ளது. இந்தப் பகுதிகளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே பாதுகாப்பான பகுதிகளுக்குமாற்றப்பட்டுவிட்டனர்.
சுத்தமல்லி, அலக்குடி உள்ளிட்ட கிராமங்களில் ஒரு நபர் கூட இல்லை. அந்தக் கிராமங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.முகத்துவாரப் பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் சமாளிக்கும் வகையில், நீச்சல் வீரர்கள் அடங்கிய காவல் படையும்,மருத்துவக் குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
