சென்னை பேய் மழைக்கு 13 பேர் பலி
சென்னை:
சென்னையில் பெய்த 2 நாள் மழைக்கு 13 பேர் பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளது.
சென்னையை மிரட்டி வந்த புயல் தற்போது ஆந்திராவை அலைக்கழித்துள்ளது. மழை நின்றுள்ள சென்னையில்மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.மழையால் ஏற்பட்ட சேதங்களை அரசு அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் மின்சார தாக்குதல், மூச்சுத் திணறல், தண்ணீரில் மூழ்கி என அடையாளம் தெரியாத 5 பேரின் பிணங்கள்கைப்பற்றப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை இரவு பெய்த கன மழைக்கு 51 வயது முதியவர் மூச்சுத் திணறல், மூச்சிரைப்பு ஏற்பட்டுபரிதாபமாக இறந்தார்.
புரசைவாக்கம் பகுதியில், கங்காதீஸ்வரர் கோவில் குளத்தில் மூழ்கி 19 வயது இளைஞர் இறந்தார். சூளைகத்தியப்பன் தெருவில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
மகாகவி பாரதி நகர் பகுதியில் வீட்டின் முன்பகுதியில் உட்கார்ந்த நிலையில் 55 வயது நபர் பிணமாக கிடந்தார்.அவர் மீது மரம் விழுந்து நசுக்கியிருந்தது.
வியாசர்பாடி காவல் நிலையத்தின் பின்பகுதியில் உள்ள கல் பிளாட்பாரத்தில், குளிரில் விரைத்துப் போய் ஒருவாலிபர் பிணமாக கிடந்தார். இந்த பிணங்கள் அனைத்தும் மீட்கப்பட்டு அரசு பொது மருத்துவமனைபிணவரையில் வைக்கப்பட்டுள்ளன.
இவர்கள் யார் என்பது அடையாளம் தெரியவில்லை.
சென்னையில் மழைக்கு பலியான மேலும் 5 பேரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டன. சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இன்று மேலும் ஐந்து பிணங்களை பொதுமக்களும், போலீஸாரும் மீட்டுள்ளனர். வேளச்சேரி ஏரியில்சாமுண்டீஸ்வரி என்ற இளம் பெண்ணின் பிணம் இன்று மிதந்தது. சடலத்தை போலீஸார் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.
இதேபோல நகரின் வேறு சில பகுதிகளிலிருந்து மேலும் நான்கு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அனைவரும் மழைக்குப்பலியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் இன்று பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.
மழையால் சேதமடைந்திருந்த அந்த கட்டிடம் இன்று முழுமையாக இடிந்து போனது. இதில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர்படுகாயமடைந்தனர். அவர்களுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மழை விட்டு 2 நாட்களாகியும் மடிப்பாக்கம், ராம் நகர், வேளச்சேரி, புளியந்தோப்பு, வியாசர்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில்வெள்ள நீர் முழங்கால் வரை தேங்கிக் கிடப்பதால் இப்பகுதியில் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புளியந்தோப்பு பகுதியில் கடந்த 3 நாட்களாகவே மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications