போலீஸ் தேர்வு வினாத்தாள் லீக்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் போலீஸ் தேர்வுக்கான வினாத்தாள்கள் அடுத்தடுத்து வெளியான விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் காவலர் தேர்வுக்காக இருமுறை மாநிலம் தழுவிய அளவில் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், இரண்டு முறையும்முன் கூட்டியே வினாத்தாள்கள் வெளியாகி பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இதில் மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கும் அவர்களது அலுவலக ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இது தொடர்பாக வெறும் கண்துடைப்பு விசாரணை மட்டும் நடத்திய தமிழக அரசு பேருக்கு சில காவலர்ளை மட்டும்தற்காலிக பணிநீக்கம் செய்ததுவிட்டு அமைதியாகிவிட்டது.

இதில் தொடர்புடைய உயர் போலீஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந் நிலையில் வேலூர் மாவட்டம் தக்கோலத்தைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத்தாக்கல் செய்தார். அதில், காவலர் தேர்வுக்காக கடந்த மார்ச் மற்றும் ஜூன் மாதம் என இரு முறை நடந்த தேர்வுகளின்போதுவினாத்தாள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களைக் பாதுகாக்கும் முயற்சியில், தமிழகஅரசும், காவல்துறையும் படு தீவிரமாக செயல்படுகின்றன.

இதில் தொடர்புடைய உயர் காவல் அதிகாரிகளை காக்க தமிழக அரசு தீவிரமாக உள்ளது. எனவே மாநில அரசின் விசாரணையில்நியாயம் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. இந்தச் சூழ்நிலையில் இவ்விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைப்பதே சரியாகஇருக்கும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கண்ணதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,

காவலர் தேர்வுக்கான வினாத்தாள்கள் முன் கூட்டியே வெளியாகியுள்ள சம்பவம் ஒரு திருட்டு சம்பவம் போன்றதுதான். கேள்வித்தாள்கள் திருடப்பட்டு அவை சிலருக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில் பல உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவே தெரிய வந்துள்ளது. இதுபோன்ற சம்பவத்தில்,வெறுமனே ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது எதற்கும் உதவாது. கடுமையான குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுஅவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இந்த விஷயத்தில் அதுபோல நடக்கவில்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கைஎடுங்கள் என பலமுறை அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதைத் தவிர வேறு வழி இந்த நீதிமன்றதிதற்குத் தெரியவில்லை.

ஐ.ஜி. அந்தஸ்திலான ஒரு அதிகாரியின் தலைமையில் விசாரணைக் குழுவை உடனடியாக சிபிஐ இயக்குனர் அமைக்க வேண்டும்.காவலர் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்க வேண்டும்.

இந்த விசாரணைக்கு தமிழக அரசும், காவல்துறையும் தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். சிபிஐ விசாரணைநடப்பதால், மாநில அரசு தனது விசாரணைகள், ஒழுங்கு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றுநீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை தொடர்பான வழக்குகளில் அரசுக்கு பாதகமாகவே தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது.

முதலில் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது.

பின்னர் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் பஸ்சில் வைத்து உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை தர்மபுரிநீதிமன்றத்திலிருந்து சேலத்திற்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் அதிமுக அரசு மீது உயர்நீதிமன்றம் கடுமையாககுற்றம் சாட்டியது.

பின்னர் சிவகாசி ஜெயலட்சுமி வழக்கை காவல்துறையிடமிருந்து சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சமீபத்தில் சங்கரராமன் கொலை வழக்கு தமிழக நீதிமன்றத்திலிருந்து புதுவைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதிலும் அதிமுக அரசு மீதுஉச்சநீதிமன்றம் கடும் குற்றாச்சாட்டுக்களை சுமத்தியது நினைவிருக்கலாம்.

இந் நிலையில் தற்போது காவலர் வினாத்தாள் வெளியான வழக்கும் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

ரொம்ப நல்ல காவல்துறை...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+