பின்னணிப் பாடகி பி. லீலா மரணம்
சென்னை:
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே உள்பட ஆயிரத்திற்கும்மேற்பட்ட இனிமையான பாடல்களைப் பாடிய முன்னாள் திரைப்படப் பின்னணிபாடகி பி.லீலா மரணமடைந்தார்.
தமிழ் சினிமாவில் ஏராளமான இனிமையான பாடல்களைப் பாடியுள்ளவர் பி.லீலா. 76வயதான பி.லீலா, சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள அவரது சகோதரிவீட்டில் வசித்து வந்தார்.
கடந்த ஒரு மாதமாக அவருக்கு உடல் நலம் சரியில்லை. இதனால் சிகிச்சை எடுத்துவந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் திங்கள்கிழமை காலை அவர்மரணமடைந்தார்.
அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடக்கிறது.
கண்ணும் கண்ணும் கலந்து, வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையைஉள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இனிமையான பாடல்களைப் பாடியுள்ளார் லீலா.
ஏ.எம்.ராஜாவுடன் சேர்ந்து அவர் பாடியுள்ள அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்ஆனவை. அந்தக்காலத்தில் பத்மினி, சாவித்திரி போன்ற முன்னணி நாயகிகளுக்குலீலா அதிக அளவில் பாடல்களைப் பாடியுள்ளார்.
தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் லீலாபாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications