தேவர் நினைவிடத்தில் கார்த்திக் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி
பசும்பொன்:
![]() |
முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் நடிகர் கார்த்திக் அஞ்சலி செலுத்த வந்தபோது, அவரது ஆதரவாளர்களுக்கும், போலீஸாருக்கும்இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.
முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவரும், விரைவில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கவுள்ளவரும், சரணாலயம் அமைப்பின்தலைவருமான நடிகர் கார்த்திக், தனது ரசிகர்கள் புடை சூழ ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர்நினைவிடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார்.
தேவர் குரு பூஜையில் கலந்து கொண்ட அவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கார்த்திக்குடன் ஏராளமானரசிகர்களும் வந்ததால் அங்கு பரபரப்பும், இட நெருக்கடியும் ஏற்பட்டது.
இதையடுத்து கார்த்திக்கை மட்டும் நினைவிடத்திற்குள் அனுப்பிய போலீஸார் ரசிகர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசம் அடைந்தரசிகர்கள், போலீஸாரை எதிர்த்து கோஷமிட்டனர். அவர்களைத் தாக்கவும் முயன்றனர்.
இதையடுத்து ரசிகர்களை தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர். பின்னர் கார்த்திக் திரும்பவும் வெளியே வந்தபோது ரசிகர்கள் அவருடன்சேர்ந்து அங்கிருந்து சென்றனர்.இதேபோல தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரான நடிகர் விஜயகாந்த், சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர்சிலைக்கு மாலை அணிவித்தார். அவருடன் கட்சியின் பொதுச் செயலாளர் ராமு வசந்தனும் சென்று மாலை அணிவித்தார்.
மதுரையில் தான் நடத்திய மாநாட்டில் பல தலைவர்களின் படங்களை வைத்த விஜய்காந்த் தேவரின் படத்தை மட்டும் வைக்கவில்லை.இதனால் அவருக்கு தேவர் சமூகத்தினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இந் நிலையில் பசும்பொன்னுக்கு அவர் வந்தால் அவரை எதிர்த்துப் போராட்டம் நடத்தவும் சில முக்குலத்தோர் அமைப்பினர்திட்டமிட்டிருந்தனர். இதனால் அங்கு வருவதை விஜய்காந்த் தவிர்த்துவிட்டதாகத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications